தமிழகம்

அமைச்சர் வன்னியரசுவுக்கு விஹெச்பி கண்டனம்

செய்திப்பிரிவு

மதுரை: சமூக நீதி விடுதிகளில் மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்படும் என்ற அமைச்சர் வன்னியரசுவின் அறிவிப்புக்கு, விஹெச்பி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது: தவெக ஆட்சியில் திமுகவை பின்பற்றி இந்து விரோத, இந்து கலாச்சாரத்துக்கு எதிரான போக்குகளை கையாண்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

தவெகவில் உள்ள சில அதிகார மையங்களின் இந்து விரோதப் போக்கை முதல்வர் விஜய் ஒடுக்க வேண்டும். அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தரப்பு மாணவர்கள் பயிலும் சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க பரிசீலிப்பதாக, தமிழக அமைச்சர் வன்னியரசு அறிவித்துள்ளார்.

இது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அமைச்சரின் அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT