தமிழகம்

வேளாண் பட்ஜெட் 2026-27: மகளிருக்கு மானியத்தில் ட்ரோன்கள் வழங்கும் வெற்றி வான்மகள்

செய்திப்பிரிவு

ஐ.நா. சபை நடப்பு 2026-ம் ஆண்டை, சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவித்துள்ளது. பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக மாற்றுவதன் மூலம், உரம், பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிர்க் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் எளிதாகும்.

இதற்காக, தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்குபவர் பயிற்சி மற்றும் இயக்குபவர் உரிமம் ஆகியவை தமிழ்நாடு பல்கலைக்கழக தொலைநிலை விமான பயிற்சி நிறுவனத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

‘வெற்றி வான்மகள்’ என்னும் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.2.50 கோடியில் ட்ரோன்களும் வழங்கப்படும்.

‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’

நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும், கிராமப்புறங்களில் வீட்டைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளிலும் செடி வளர்ப்பு பைகளுடன் கூடிய தொகுப்புகள், செங்குத்து தோட்டங்கள், நீரியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்த்து, நலமான சூழலையும் ஏற்படுத்த ரூ.10 கோடியில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ செயல்படுத்தப்படும்.

நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விவசாயிகளுக்கு விருது

சிறு, குறு விவ​சா​யிகளை ஊக்​குவிக்க ‘மக்​கள் சேவகர் அஞ்​சலை​யம்​மாள் சிறு, குறு விவ​சாயி விருது’ வழங்​கப்​படும். இதில் 3 விவ​சா​யிகளுக்கு முறையே, ரூ.2.50 லட்​சம், ரூ.1.50 லட்​சம், ரூ.1 லட்​சம் என மொத்​தம் 30 விவ​சா​யிகளுக்கு ரூ.50 லட்​சம் வழங்​கப்​படும்.

நெல், சிறு​தானி​யங்​கள், பயறு வகைகள், எண்​ணெய் வித்​துக்​கள், பருத்தி உள்​ளிட்ட 9 பயிர்​களில் 2 ஏக்​கர் பரப்​பள​வில் பயி​ரிட்​டு, அதிக மகசூல் பெறும் விவ​சா​யிகளுக்கு மாவட்ட அளவில் ‘வெற்றி விவ​சாயி விருது’ வழங்​கப்​படும்.

முதல் பரி​சாக ரூ.50 ஆயிரம், 2-வது பரி​சாக ரூ.25 ஆயிரம் என 90 பரிசுகள் வழங்​கப்​படும். உயிர்ம வேளாண் முறை​யில் சாகுபடி மேற்​கொள்​ளும் விவ​சா​யிகளை சிறப்​பிக்க, சிறந்த உயிர்ம விவ​சா​யிகளுக்​கான ‘நம்​மாழ்​வார் விருது’ 5 விவ​சா​யிகளுக்கு வழங்​கப்​படும். இதில் ஒவ்​வொரு விவ​சா​யிக்​கும் தலா ரூ.2 லட்​சம் வழங்​கப்​படும்.

* பயறு வகை​களில் ரூ.65.28 கோடி, எண்​ணெய் வித்​துக்​களில் ரூ.138.36 கோடி என மொத்​தம் ரூ.203.64 கோடி​யில் மத்​திய, மாநில நிதி ஒதுக்​கீட்​டில் ‘பயறு வகைகள், உணவு எண்​ணெய் வித்​துக்​கள் தன்​னிறைவு இயக்​கம்’ செயல்​படுத்​தப்​படும்​.

* காலநிலை மாற்​றத்தை எதிர்​கொள்ள ரூ.17.70 கோடி​யில் ‘வேளாண் காடு​கள் திட்​டம்’ செயல்​படுத்​தப்​படும்.

* விவ​சாய நிலங்​களில் கதிரடிக்​கும் களம் அமைக்க ரூ.2.80 கோடி, தார்ப்​பாய்​கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்​கீடு.

* ஆழ்​துளை கிணறுகளு​டன் சூரிய சக்தி மோட்​டார் அமைக்க எஸ்​சி, எஸ்டி விவ​சா​யி களுக்கு சிறப்பு மானிய​மாக ரூ.56.72 கோடி, மற்ற விவ​சா​யிகளுக்கு ரூ.23 கோடி ஒதுக்​கீடு.

* தஞ்சாவூரில் மாபெரும் வேளாண் இயந்திரக் கண்காட்சி நடத்தப்படும்.

* ப்ளூ பெர்​ரி, ட்ராகன் ஃப்​ரூட், பேசன் ஃப்​ரூட், கிவி, அவகேடோ போன்ற வெளி​நாட்​டுப் பழங்​களை தனிப் பயிர்​களாக​வும், ஊடு​ப​யிர்​களாக​வும் 930 ஏக்​கரில் பயி​ரிட ரூ.1.87 கோடி ஒதுக்​கீடு.

* எருமை இனப்​பெருக்​கத்தை மேம்​படுத்த ரூ.2 கோடி​யும், மகளிர் சுயஉதவிக் குழுக்​களின் 5,000 கால்​நடைகளுக்கு பரா​மரிப்பு உதவி​யாக ரூ.2.50 கோடி​யும் ஒதுக்​கீடு.

* ரூ.2.40 கோடி​யில் 59 உழவர் சந்​தைகளில் மின்​னணு விலைப் பலகை​கள்.

* திரு​வண்​ணா​மலை மாவட்​டம் போளூர், ராணிப்​பேட்டை மாவட்​டம் அம்​மூர் விற்​பனைக் கூடங்​களில் சேமிப்​புக் கிடங்​கு​கள் மற்​றும் துறை​முகம், விமான நிலை​யங்​கள் அருகே 500 டன் குளிர்​ப​தனக் கிடங்​கு​கள் அமைக்​கப்​படும்.

SCROLL FOR NEXT