தமிழகம்

அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலி்ல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து அரசியல் கட்சிகளின் ரோடுஷோக்கள், பொதுக்கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள்சக்தி கட்சி சார்பில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கட்சிகள் சார்பில் பரிந்துரை.. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. தமிழக அரசு சார்பி்ல் இதுதொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தவெக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பிலும் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கடந்தநவ.28-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று (டிசம்பர் 19)காலை தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT