தமிழகம்

வனப்பகுதி ஆக்கிரமிப்பு புகார்: மேகமலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி/சென்னை: மேகமலை வனப்​பகு​தி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றக் கோரிய வழக்​கின் தீர்ப்பை ஒத்​தி​வைத்த உச்ச நீதி​மன்​றம், வனப்​பகு​தி​கள் ஆக்​கிரமிக்​கப்​படு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது என்று திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளது மாஞ்​சோலை, மேகமலை மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பாது​காக்​கப்​பட்ட வனப்​பகு​தி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​வது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் விக்​ரம் நாத், எஸ்​.​வி.என்​.பட்டி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜெய்​தீப் குப்​தா, மேகமலை​யின் பல பகு​தி​கள் முன்பு வனமாக இல்லை என்​றும், தற்​போது அவை ரிசர்வ் வனமாக அறிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தெரி​வித்​தார்.

ஆனால் நீதிப​தி​கள், வனம் என அறிவிக்​கப்​பட்​டால் அது வனம்​தான் என்​றும், அதற்கு வேறு எந்த அர்த்​த​மும் இல்லை என்று கூறியதோடு, வனப்​பகு​தி​யில் இலவம் பஞ்சு தோட்​டம் அமைப்​பதை அரசு ஏன் ஊக்​குவிக்​கிறது? என கேள்வி எழுப்​பியதோடு, இலவம் பஞ்சு தோட்​டங்​களால் ஏற்​பட்ட ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டும் என்ற நிலைப்​பாட்​டில் மாற்​றமில்லை என தெரி​வித்​தனர்.

அதற்கு தமிழக அரசு தரப்​பில், இலவம் பஞ்சு தோட்​டங்​களை அமைத்​துள்​ளவர்​கள் அப்​பகு​தி​யில் வசித்து வரும் மக்​கள்​தான். வெளி​யாட்​கள் யாரும் தோட்​டங்​கள் அமைக்​க​வில்​லை. மேகமலை வனப்பகுதியில் சமீப கால​மாக யாருக்​கும் நிலப் பட்டா வழங்​கப்​பட​வில்​லை.

ஆனால் உரிய நிலப் பட்டா வைத்​திருப்​பவர்​களை அப்​புறப்​படுத்த நடவடிக்கை எடுத்​தால் சட்​டம் ஒழுங்கு பிரச்​சனை ஏற்​படும்.

அதேவேளை​யில், பட்டா இல்​லாமல் நிலத்தை ஆக்​கிரமித்து உள்​ளவர்​களிட​மிருந்து அதனை மீட்க நோட்​டீஸ் அனுப்பி நடவடிக்கை தொடங்​கப்​பட்​டுள்​ளது என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதைத்​தொடர்ந்து நீதி​மன்​றத்​திற்கு உதவுவதற்​காக நியமிக்​கப்​பட்ட வழக்​கறிஞர் பரமேஸ்​வர் கூறுகையில், உண்​மை​யாக வனத்தை நம்பி வாழும் மக்​கள் பாதிக்​கப்​படக் கூடாது என்​றாலும், மேகமலை சுற்​று​வட்​டாரத்​தில் இலவம் பஞ்சு தோட்​டம் அமைக்க அரசு ஊக்​கு​வித்த பின்​னரே அதிக ஆக்​கிரமிப்​பு​கள் ஏற்​பட்​டது. எனவே ஆக்​கிரமிப்​பாளர்​கள் நில உரிமை கோர அனு​ம​திக்​கக் கூடாது.

இலவம் பஞ்சு தோட்​டம் அமைத்​துள்​ளவர்​கள் வன உரிமை சட்​டத்​தின் கீழ் நில உரிமை கோர அனு​ம​தித்​தால் அது தவறான முன்​னு​தா​ரண​மாகி​விடும் என்று சுட்​டிக்​காட்​டி​னார் அப்​போது, தமிழக அரசு தரப்​பில், வன உரிமைச் சட்​டம் மக்​களின் உரிமை​களைப் பாது​காப்​ப​தற்​காக கொண்​டு​வரப்​பட்ட சட்​டம், பல தலை​முறை​களாக அப்​பகு​தி​யில் வசித்து வரும் மக்​களுக்கு அந்​தச் சட்​டத்​தின் கீழ் உரிமை கோர முடி​யாது என எவ்​வாறு கூற முடி​யும் என்​று வாதம் வைக்​கப்​பட்​டது அனைத்து தரப்பு வாதத்​தை​யும் கேட்ட நீதிப​தி​கள், இலவம் பஞ்சு தோட்​டம் அமைப்​ப​தற்​காக வெளி​யில் இருந்து வந்​தவர்​கள் எந்த வகை​யிலும் வனப்​பகு​தியை ஆக்​கிரமிப்​பதை அனு​ம​திக்க முடி​யாது என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​த நீதிப​தி​கள் வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல்​ ​ ஒத்​திவைத்​தனர்​.

SCROLL FOR NEXT