சவுக்கு சங்கர் மீதான வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

சவுக்கு சங்கர் மீதான வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக கூறி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் 2013-ம் ஆண்டு புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவசக்தி தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

சவுக்கு சங்கர் மீதான வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை புறக்கணித்தது திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in