தமிழகம்

சென்னை வெளிவட்டச் சாலை தனியார் ஒப்பந்த முயற்சியை அரசு திரும்பப் பெற வேல்முருகன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வெளிவட்​டச் சாலைத்தொடர்​பான தனி​யார் ஒப்​பந்த முயற்​சி​யை, தமிழக அரசு உடனடி​யாகத் திரும்​பப் பெற வேண்​டும் என்​று, தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது குறித்​து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை வண்​டலூர் முதல் மீஞ்​சூர் வரை நீளும் வெளிவட்​டச் சாலை என்​பது தமிழகத்​தின் பொருளா​தார ஓட்​டத்​தைத் தாங்கி நிற்​கும் முக்​கிய​மான பொதுச் சொத்​து.

சென்னை நகரின் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைத்​து, சரக்​குப் போக்​கு​வரத்​தை​யும் தொழில் வளர்ச்​சி​யை​யும் வேகப்​படுத்​தும் இந்த கட்​டமைப்​பை, நீண்​ட​கால வரு​மான உரிமை​யுடன் தனி​யாரிடம் ஒப்​படைக்க முயற்​சிப்பது மிகுந்த கவலைக்​குரியது.

தமிழக அரசு மக்​களின் வரிப் பணத்​தில் உரு​வாக்​கிய உள்​கட்​டமைப்​பின் பயனை, பல ஆண்​டு​கள் தனி​யார் நிறு​வனம் அனுபவிக்​கும் வகை​யில் ஒப்​பந்​தம் செய்​வது, எந்த வகை​யிலும் மக்​கள் நல ஆட்​சிக்கு ஏற்​றதல்ல.

இந்த ஒப்​பந்​தம் தொடர்​பாக எழுந்​துள்ள சந்​தேகங்​கள் அனைத்​தும் வெளிப்​படை​யான முறை​யில் விளக்​கப்பட வேண்​டும். சென்னை வெளிவட்​டச் சாலைத் தொடர்​பான தனி​யார் ஒப்​பந்த முயற்​சி​யை, தமிழக அரசு உடனடி​யாகத் திரும்​பப் பெற வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT