தமிழகம்

திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேல்முருகன் வலியுறுத்தல்

பா.பிரகாஷ்

சென்னை: ஈழத் தமிழர்​கள் அடைக்​கப்​பட்​டுள்ள திருச்சி சிறப்பு முகாமை நிரந்​தர​மாக மூட வேண்​டும் என்​று, தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: திருச்சி சிறப்பு முகாமில் அடைக்​கப்​பட்​டுள்ள ஈழத் தமிழர்​கள், தங்​களின் அடிப்​படை மனித உரிமை​களுக்​காக 5-வது நாளாக 5 பேர், உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருப்​பதும், அவர்​களில் 3 பெண்​களின் உடல்​நிலைக் கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக​வும் வெளி​யாகி​யுள்​ள தகவல்​கள் மிகுந்த வேதனையளிக்​கின்​றன.

இனப்​படு​கொலை​யில் தப்​பி, பாது​காப்பு தேடித் தமிழகத்தை நம்பி வந்த ஈழத் தமிழர்​களை, ஆண்​டுக்​கணக்​கில் சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறை போன்ற சூழலில் அடைத்து வைப்​பது மனி​தாபி​மானத்​துக்​கும்,மனித உரிமை​களுக்​கும் எதி​ரானச் செய​லாகும்.

உண்​ணா​விரதத்​தில் ஈடு​பட்​டுள்ள 5 பேருக்கு மட்​டுமல்​லாமல், திருச்சி சிறப்பு முகாமில் நீண்​ட​கால​மாகத் தடுத்து வைக்​கப்​பட்​டுள்ள அனைத்து ஈழத் தமிழர்​களின் நிலை​யும், மனி​தாபி​மான அடிப்​படை​யில் மறு​பரிசீலனை செய்​யப்பட வேண்​டும்.

அவர்​கள் விரும்​பி​னால் பாது​காப்​பான 3-ம் நாடு​களுக்​குச் செல்​லத் தேவை​யான சட்ட, நிர்​வாக மற்​றும் தூதரக நடவடிக்​கைகளை தமிழக அரசு, மத்​திய அரசுடன் இணைந்து உடனடி​யாக மேற்​கொள்ள வேண்​டும்.

இந்​தி​யா​விலேயே வாழ விரும்​பும் ஈழத் தமிழர்​களுக்கு இந்​தி​யச் சட்​டங்​களின்​படி குடி​யுரிமை அல்​லது சட்​டப்​பூர்வ நிரந்தர வாழ்​வுரிமை கிடைக்​கத் தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொள்​ள​வும், அதற்​காகத் தமிழக அரசு தொடர்ந்து வலி​யுறுத்த வேண்​டும்.

மேலும், உண்​ணா​விரதத்​தில் ஈடு​பட்​டுள்ள 5 பேருடன் உடனடி​யாக பேச்​சு​வார்த்தை நடத்​தி, அவர்​களின் கோரிக்​கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்​டும்.

நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் மற்​றும் நிர்​வாக நடவடிக்​கைகளை விரைந்து முடித்​து, திருச்சி சிறப்பு முகாமை நிரந்​தர​மாக மூட வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT