தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலை​யத்​துக்​குள் வரும் அனைத்து வாக​னங்​களுக்​கும், பார்க்​கிங் கட்​ட​ணத்தை உயர்த்​தி, இந்​திய விமான நிலைய ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

அதன்​படி, கார்​களுக்கு 30 நிமிடங்​கள் வரை ரூ.85-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஒரு மணி நேரம் வரை ரூ.110-ல் இருந்து ரூ.115 ஆகவும், 2 மணி நேரம் வரை ரூ.165-ல் இருந்து ரூ.175 ஆகவும் உயர்த்தப்பட்டுள்​ளது. அதே​போல், ஒவ்​வொரு மணி நேரத்​துக்​கும் கட்​ட​ணம் உயர்ந்​துள்​ளது. கார்​கள் 10 மணி நேரத்​தில் இருந்து 24 மணி நேரம் வரை பார்க்​கிங்​கில் நிறுத்​தப்​பட்​டிருந்​தால், ரூ.550-ல் இருந்து ரூ.580 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இரு சக்கர வாக​னங்​களுக்​கு, ஒரு மணி நேரத்​துக்கு ரூ.20-ம், 2 மணி நேரத்​துக்கு ரூ.35-ம் கட்​ட​ணம் என்ற பழைய கட்​ட​ணமே வசூலிக்​கப்​பட​வுள்​ளது. அதற்கு மேல் நிறுத்​தப்​படும் ஒவ்​வொரு மணி நேரத்​துக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்பட இருக்​கிறது. இருசக்கர வாக​னங்​கள் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்​தப்​பட்​டால் ரூ.100-ல் இருந்து ரூ.105 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

விமான நிலை​யத்​தில் பணி​யாற்​றும் ஊழியர்​கள், தங்​கள் கார்களுக்கு மாதம் ரூ.580, இருசக்கர வாக​னங்​களுக்கு மாதம் ரூ.230 கட்​ட​ணம் செலுத்த வேண்​டும். இந்த புதிய கட்​டண உயர்வு இன்று அதி​காலை முதல்​ அமலுக்​கு வந்​தது.

SCROLL FOR NEXT