மு. வீரபாண்டியன்

கோப்புப் படம் 

 
தமிழகம்

“கூட்டணியில் கருத்து வேறுபாடு இயல்பு” - வீரபாண்டியன் சொல்கிறார்

செய்திப்பிரிவு

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் நேற்று காரைக்​குடி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கோரிக்​கை​களை வலி​யுறுத்தி தான் பல போராட்​டங்​கள் நடக்​கின்​றன. இத்​தகைய போராட்​டங்​களுக்கு நாங்​கள் ஆதரவு தெரிவிக்​கி​றோம். போராடு​பவர்​களு​டன் தமிழக அரசு பேச்​சு​வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்​டும்.

திமுக அரசின் நலத்​திட்​டங்​கள் மக்​களை சென்​றடைந்​துள்​ளன. ஆட்​சி​யில் குறை​களும் இருக்​கிறது; நிறை​வேற்ற வேண்​டிய கோரிக்​கை​களும் இருக்​கின்றன என்​பதை முதல்​வரே கூறி​யுள்​ளார். தேர்தலில் திமுக கூட்​டணி மாபெரும் வெற்றி பெறும். கூட்​ட​ணி​யில் கட்​சிகளுக்​குள் கருத்து வேறு​பாடு வரு​வது இயல்பு தான். திமுக கூட்​ட​ணி​யில் ஜனநாயக ரீதி​யாக கருத்​துகள் கூற சுதந்​திரம் உள்​ளது. பேச்​சு​வார்த்தை மூலம் முதல்​வர் தீர்வு காண்​பார். ஆட்​சி​யில் பங்கு என்று கோரமாட்டோம். கூடு​தல் தொகுதி​களை பெற்று வெற்றி பெறுவோம் என்றார்​.

          
SCROLL FOR NEXT