பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், பட்டினப்பாக்கம் கையெழுத்து இயக்கத்தை முள்ளி மாநகர் பகுதியில் தொடங்கி வைத்தார். | படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

மீனவ மக்களின் வாழ்வியல் கோரிக்கை மீது தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: “பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் கட்​டும் திட்​டத்தை அரசு கைவிட வேண்​டும்.

மீனவ மக்​களின் வாழ்வியல் கோரிக்கை மீது கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும்” என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​தார்.

சென்னை பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் கட்​டு​வதற்​கான அறி​விப்பை ரத்து செய்ய வலி​யுறுத்​தி, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் கையெழுத்து இயக்​கம் நேற்று தொடங்​கியது.

நவ. 1-ம் தேதி வரை நடை​பெற உள்ள இந்த கையெழுத்து இயக்​கத்தை பட்​டினப்​பாக்​கம் முள்ளி மாநகரில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் முதல் கையெழுத்​திட்​டு, தொடங்​கி​வைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் மு.வீர​பாண்​டியன் கூறிய​தாவது: பட்​டினப்​பாக்​கம் பகு​தி​யில் புதிய தலை​மைச் செயல​கம் என்ற திட்​டத்தை அரசு கைவிட வேண்​டும், அதற்​கான அரசாணையை அரசு வெளி​யிட வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில், கையெழுத்து இயக்​கம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

கடலும் கடல் சார்ந்த பகு​தி​யும் அங்கு வாழ்​கிற மீனவ மக்​களுக்கு சொந்​த​மானது. அதே​போல, மலை​யும் மலை​சார்ந்த பகு​தி​களும் மலை​வாழ் மக்​களுக்கு சொந்​த​மானது. மலை​யில் இருந்து அப்​பகுதி மக்​களை வெளி​யேற்றி விட்​டால், மலை, காடு பொருள் இழந்து விடும்.

கடல் சார்ந்த பகு​தி​யில் இருந்து மீனவ மக்​களை வெளி​யேற்​றி​விட்​டால், கடல் பொருள் இழந்​து​விடும். எனவே, தமிழக அரசு இதில் கூடு​தல் கவனம் செலுத்​தி, மீனவ மக்​களின் கோரிக்​கைக்கு செவி​சாய்க்க வேண்​டும் என வலி​யுறுத்​துகிறேன்.

கடற்​கரை காற்றை தடுப்​பது இயற்கை மீது தொடுக்​கும் தாக்​குதல். கடல்​வெளி அம்​மக்​களுக்கு சொந்​த​மானது. அங்கே எத்​தகைய கட்​டிடங்​களும் எழக்​கூ​டாது. இது​தான் சூழல் அரசி​யல்.

எனவே, சூழல் அரசி​யலை முன்​னெடுக்க வேண்​டிய பொறுப்​பும் தமிழக அரசுக்கு உண்​டு. இவற்றை எல்​லாம் கவனத்​தில் கொண்​டு, மீனவ மக்​களின் வாழ்​வியல் கோரிக்கை மீது தமிழக அரசு கூடு​தல் கவனம் செலுத்​தி, அதை நிறைவேற்ற வேண்​டும்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT