தமிழகம்

‘​திருமாவளவனை மதிக்கவில்லை’ - விருத்தாசலத்தில் பிரேமலதாவுக்கு விசிக-​வினர் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

திரு​மாவளவனை மதிக்​க​வில்லை என்று கூறி தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தாவுக்கு அவர் போட்​டி​யிடும் விருத்​தாசலம் தொகு​தி​யில் விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யினர் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

விருத்​தாச்​சலம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் பிரேமல​தா, நல்​லூர் ஒன்​றி​யத்​திற்​குட்​பட்ட கண்​டப்​பங்​குறிச்​சி, நகர், இலங்​கியனூர், வலசை, பிஞ்​சனூர் மற்​றும் சேப்​பாக்​கம், ஐவது குடி உள்​ளிட்​டக் கிராமங்​களில் பிரேமலதா பிரச்​சார வேனில் பயணித்​த​படி வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார். பிரச்​சா​ரத்​தின் போது, எப்​போதும் குரலை உயர்த்​திப் பேசும் பிரேமல​தா, வழக்​கத்​துக்கு மாறாக சோர்​வுடன் காணப்​பட்​டார்.

          

மிகு​வும் சுருக்​க​மாக பேசி வாக்கு சேகரிப்​பதை காண​முடிந்​தது. “அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்த வேண்​டும்” என்று அப்​பகுதி விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யினர் வலி​யுறுத்​தினர். அதைத்​தொடர்ந்​து, அங்கு சென்று அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார் பிரேமல​தா.

அப்​போது விசிக-வைச் சேர்ந்த சிலர், ‘திரு​மாவளவன் கடலூரில் பேசும்​போது மேடை​யில் இருந்த பிரேமலதா அவரை மதிக்​க​வில்​லை, எழுந்து நிற்​க​வில்​லை’ என்று தெரிவிக்க, அங்​கிருந்த விசிக மண்டல செய​லா​ளர் திரா​விட மணி, அவர்​களை சமா​தானம் செய்​தார். உடனே முன்​னாள் மாவட்ட செய​லா​ள​ரான நீதிவள்​ளல் உள்​ளிட்​டோர் திரா​விட மணி​யிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். அதனால் அங்கு தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. பின்​னர் அங்​கிருந்த போலீ​ஸார் அவர்​களை சமரசம் செய்து அனுப்பி வைத்​தனர்.

கடந்த வாரம், கடலூரில் திமுக மற்​றும் கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை அறி​முகம் செய்​யும் நிகழ்ச்​சி​யில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் மேடை​யில் இருந்​தார். திரு​மாவளவன் மேடை​யில் அவரது பெயரை கூறி அறி​முகம் செய்​த​போது பிரேமலதா விஜய​காந்த் எழுந்து நிற்​க​வில்​லை. இதுகுறித்து சர்ச்சை எழுந்​தது. அதற்கு பிரேமலதா பின்னர் விளக்​கம்​ அளித்​தது குறிப்​பிடத்​தக்கது.

SCROLL FOR NEXT