தமிழகம்

2026-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: 2026-ம் ஆண்​டுக்​கான விசிக விருதுகள் பெறு​வோர் பட்​டியலை, அக்கட்சியின் தலைவர் திரு​மாவளவன் வெளி​யிட்​டார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் சார்​பில் தமிழகம் மற்​றும் இந்​திய அளவில் ஆண்​டு​தோறும் பல்​வேறு தளங்​களில் சாதனை​கள் படைத்த சான்​றோருக்கு விருதுகள் வழங்​கிச் சிறப்​பித்து வரு​கிறோம்.

சமூகம், அரசி​யல், பண்​பாடு, கலை-இலக்​கி​யம் போன்ற தளங்​களில் சீரிய முறை​யில் தொண்​டாற்​றும் சிறப்​புமிக்க தலை​வர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு ஆளுமை வாய்ந்த சான்​றோருக்கு அம்​பேத்​கர் சுடர், பெரி​யார் ஒளி, காம​ராசர் கதிர், அயோத்​தி​தாசர் ஆதவன், காயிதேமில்​லத் பிறை மற்​றும் செம்​மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்​டு​தோறும் வழங்​கிச் சிறப்​பித்து வரு​கிறோம்.

2022-ம் ஆண்​டு​முதல் கூடு​தலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வரு​கிறோம். அந்த வரிசை​யில் 2026-ம் ஆண்​டுக்​கான விசிக விருதுகள் பெறு​வோர் பட்​டியலை தற்போது வெளி​யிட​ப்படுகிறது.

விருதுகள் விவரம்

இந்த ஆண்​டுக்​கான ‘அம்​பேத்​கர் சுடர் விருது’ மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​ கழகத்​தின் முன்​னாள் துணை வேந்​தர் கே.சொக்​கலிங்​கத்​துக்​கும், ‘பெரி​யார் ஒளி விருது’ மனித உரிமைப் போராளி ஹென்றி டிபேனுக்​கும், ‘மார்க்ஸ் மாமணி விருது’ இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், ‘காம​ராசர் கதிர் விருது’ பால.பிரஜாபதி அடிகளார், ‘அயோத்​தி​தாசர் ஆதவன் விருது’ சமூக செயற்​பாட்​டாளர் ரூத்​மனோர​மா, ‘கா​யிதேமில்​லத் பிறை விருது’ ஐஎன்​டிஜே மாநில துணைத் தலை​வர் முகமது முனீர், ‘செம்​மொழி ஞாயிறு விருது’ தமிழறிஞர் வேல்​சாமி ஆகியோ​ருக்கு அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

விசிக விருதுகள் வழங்​கும் விழா சென்​னை, தேனாம்​பேட்​டை, காம​ராஜர் அரங்​கில் ஜூலை 5-ம் தேதி நடை​பெறும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT