தமிழகம்

“ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை பல மாநில முதல்வர்களும் பின்பற்றுகின்றனர்” - வைகோ

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை பல மாநில முதல்வர்களும் பின்பற்றுவதாக வைகோ புகழாரம் சூட்டிப் பேசினார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு, நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனும் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

          

அப்போது வைகோ பேசியதாவது: தஞ்சை சோழ மண்டலத்தை காப்பதற்காக, தமிழ்நாட்டின் வளங்களைப் பாதுகாப்பதற்காக நான் திமுகவை ஆதரித்து வாக்கு சேகரிக்க வந்திருக்கின்றேன். சமத்துவ, சகோதரத்துவ நாடாக தமிழகத்தை ஆண்ட ஸ்டாலின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்.

பல மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட இந்தியா கூட்டணி கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்ததாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டனர். அந்த அளவுக்கு திறமையான ஆட்சியை நடத்தி வருகின்றார். திராவிட இயக்கத்துக்கு எந்தக் கேடும் நேராமல் பார்த்துக் கொள்வது என் கடமை என்றார்.

SCROLL FOR NEXT