வைகோ
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வப்போது நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தேர்தல் அறிவித்த பின் தொடங்குவோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் ஜன.23ம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில், ஜன.23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில், தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும்.” என அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.