வைகோ

 
தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக யாருடன் கூட்டணி? - வைகோ விளக்கம்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: தற்​போது திமுக​வுடன் கூட்​ட​ணி, தோழமை தொடர்​கிறது. உள்​ளாட்​சித் தேர்​தலில் கூட்​டணி குறித்​து, அந்த நேரத்​தில் கட்​சி​யின் நிர்​வாகக் குழு கூட்​டத்தை கூட்டி அறி​விப்​போம் என மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​துள்​ளார்.

கும்​பகோணத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: மேகே​தாட்​டு​வில் அணை கட்ட அனு​ம​திக்​கக் கூடாது என மத்​திய அரசுக்கு அழுத்​தம் கொடுக்​கும் வகை​யில், ஜூன் 2-ம் தேதி சென்​னை​யில் பல்​வேறு கட்​சி, அமைப்​பு​கள் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறுகிறது. சென்னை ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெற்ற விழா​வில் காவி உடை அணிந்த திரு​வள்​ளுவர் படத்​துக்கு ஆளுநர் அர்​லேகர் மரி​யாதை செலுத்​திய செயல் மன்​னிக்க முடி​யாதது. இந்த செயல் தொடரு​மா​னால், ஆளுநர் எங்கு சென்​றாலும் மதி​முக சார்​பில் கருப்​புக்​கொடி காட்​டி போராட்டம் நடத்தப்​படும்.

முதல்​வர் விஜய், ஆட்​சிக்குவந்து சில நாட்​கள்தான் ஆகின்​றன. அதி​காரத்​துக்கு அவர் புதி​ய​வர். அவருக்கு 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்​டும். அது​வரை விமர்​சிக்க வேண்​டாம். முதல்​வர் விஜய், செய்​தி​யாளர்​களை சந்​திக்க வேண்​டும். தவிர்க்​கக் கூடாது. தற்​போது திமுக​வுடன் கூட்​ட​ணி, தோழமை தொடர்​கிறது. உள்​ளாட்​சித் தேர்​தல் குறித்​து, அந்த நேரத்​தில் கட்​சி​யின் நிர்​வாகக் குழு கூட்​டத்தைகூட்டி அறி​விப்​போம்.

தமிழகத்​தில் வன்​முறை, பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​கள் அனைத்து ஆட்​சிகளி​லும் நடை​பெற்​றுள்​ளன. பாலியல் வன்​முறை​யில் ஈடு​பட்​டு, கொலை செய்​பவர்​களுக்கு பிணை விடு​தலை வழங்​காமல், வாழ்​நாள் சிறை தண்​டனை வழங்​கும் வித​மாக, குற்​ற​வியல் சட்​டத்தை திருத்தி மாநில அரசுகள் தீர்​மானம் நிறைவேற்​றி, மத்​திய அரசுக்கு அனுப்​பி, அதை சட்​ட​மாக்க வேண்​டும். சமூகத்​தில் போதைப்​பொருள் நடமாட்​டத்தை ஒழிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT