வைகோ | கோப்புப்படம் 
தமிழகம்

நடைபெறும் தேர்தல் குருஷேத்திர போர் அல்ல: வைகோ ருசிகரம்

செய்திப்பிரிவு

நடை​பெற இருக்​கும் தேர்​தல் அரசி​யல் குருஷேத்​திர போர் இல்லை என்று வைகோ ருசிகர​மாக விளக்​கம் கொடுத்​துள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் மதிமுக போட்​டி​யிடும் 4 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர் பட்​டியல் நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ மற்​றும் மதி​முக வேட்​பாளர்​கள் முதல்​வர் ஸ்டா​லினை நேற்று சந்​தித்து வாழ்த்து பெற்​றனர்.

          

பின்​னர், வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நடை​பெறவுள்ள தேர்​தல் அரசி​யல் குரு ஷேத்​திரப் போர் என கூறுகின்​றனர், ஆனால் நான் அப்​படி கருத​வில்​லை. சம பலம் கொண்ட பாண்​ட​வர்​களும், கவுர​வர்​களும் போரிட்​டனர்.

ஆனால் இங்கே அது​போல சம பலமான​தாக போட்டி இல்​லை. திமுக கூட்​ட​ணி​தான் பலமாக இருக்​கிறது. அந்த அளவுக்கு எதிர் அணி சம பலத்​துடன் இல்​லை. திமுக தலை​மையி​லான மதசார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி 200 தொகு​தி​களில் வெற்றி பெறும். திமுக மட்​டுமே 140 இடங்​கள் வரை வெற்றி பெற்று தனிப் பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும்.

நான் ஏப்​.2ம் தேதி முதல் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ளேன். எங்​கள் முதன்மை செய​லா​ளர் மற்​றும் நிர்​வாகி​கள் திமுக மற்​றும் கூட்​டணி கட்​சி​யினருக்கு பிரச்​சா​ரம் செய்​வதற்​கான திட்​டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT