தமிழகம்

களைகட்டியது வடலூர் ஆட்டுச்சந்தை: தீபாவளியையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

செய்திப்பிரிவு

கடலூர்: வடலூரில் வார இறுதி நாளான சனிக்கிழமை தோறும் நடைபெறும் சந்தை புகழ்பெற்றது. இங்கு தீபாவளியை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணி முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள் விற்பனைக்காக வந்திறங்கின.

வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாதோப்பு, புவனகிரி, கம்மாபுரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடுகள், கொடி ஆடுகள், செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.

ஆடுகளை வாங்குவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.

ஆடுகளின் எடை, ரகம் மற்றும் தரத்தைப் பொறத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. குறைந்த பட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. வியாபாரிகள் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர். நேற்று ஒரே நாளில் 1,500 ஆடுகள் வரை விற்பனையானதாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் சுமார் ரூ.4 கோடி வரை வியாபாரம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT