தமிழகம்

டாஸ்மாக் கடைகளில் தொடரும் யுபிஐ மோசடி: தனிநபர் க்யூ.ஆர். கோடு மூலம் பணம் வசூல்

குளிர்ந்த பீருக்கு ரூ.50 கூடுதல் விலை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை புறநகர் பகு​தி​களில் டாஸ்​மாக் கடைகளில் அங்​கீகரிக்​கப்​பட்ட யுபிஐ மூலம் பணம் வாங்​காமல் தனி​நபர் க்யூ.ஆர். கோடு மூலம் பணம் வசூலிப்​ப​தாக புகார் எழுந்​துள்​ளது.

மது​பானக் கடைகளில் டாஸ்​மாக் நிறு​வனத்​தின் அதி​காரப்​பூர்வ வங்கி கணக்​குடன் இணைக்​கப்​பட்ட யுபிஐ மிஷின்​கள் கட்​டா​யம் வைத்​திருப்​பது அவசி​யம். இதில் ஜிபே, போன்பே போன்ற ஆன்​லைன் பரிவர்த்​தனை மூலம் ஏராள​மானோர் மது​வகைகளை வாங்கிச் செல்​வர். ஆனால், பல இடங்​களில் யுபிஐ மிஷின்​களில் சர்​வர் பிரச்​சினை என்று கூறி ரொக்​க​மாக பணம் செலுத்​தும்​படி டாஸ்​மாக் ஊழியர்​கள் வற்​புறுத்​து​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன.

இதற்​கிடையே, சில டாஸ்​மாக் கடைகளில் புது​வித​மான வசூல்​களும் நடை​பெற்று வரு​கின்​றன. அதாவது மது​பானக் கடைக்கு உள்​ளேயே, ஊழியர்​களுக்கு நெருக்​க​மானவர்​கள் அல்​லது பார் உரிமை​யாளர்​களுக்கு நெருக்​க​மானவர்​கள் ஏஜென்ட்​களாக செயல்​படு​கின்​றனர்.

கையில் பணக்​கட்​டுடன் அமர்ந்​திருக்​கும் அவர்​களின் செல்​போன் எண்​ணுக்கு ரூ.220-க்கு ஜிபே செய்​தால், அவர் 20 ரூபாயை கமிஷ​னாக எடுத்​துக் கொண்டு 200 ரூபாயை வாடிக்​கை​யாளரிடம் கொடுக்​கிறார். 1000 ரூபாய் என்​றால் ரூ.100 வரை கமிஷ​னாகப் பெறுகிறார்.

கமிஷன் போக மீதி பணத்தை வாடிக்​கை​யாளர்​கள் பணமாகக் கொடுத்து மது​பானம் வாங்​கு​கின்​றனர். அதில் அதி​க பட்ச விலையை விட அதி​க​மாக ரூ.10, மற்​றும் பாட்​டிலைத் திரும்​பப் பெறும் திட்​டத்​தில் ரூ.10 என கூடு​தல் விலை கொடுக்க வேண்​டி​யுள்​ளது. குளிர்ந்த பீருக்கு ரூ.210 வரை வாங்​கு​கின்​றனர். அந்த வகை​யில் மது​பானத்​துக்​கான அதி​கபட்ச விலையை விட குறைந்​த​பட்​சம் ரூ.50 வரை கூடு​தலாக செல​விடும் சூழல் ஏற்​படு​கிறது.

இது​போன்ற ஏஜென்ட்​களின் அடாவடி வசூல் இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடக்​கிறது. அதி​லும் குறிப்​பாக கடைசி அரை மணி நேரம் அதாவது 9.30 மணி​யில் இருந்து 10 மணி வரையி​லான இடைப்​பட்ட நேரத்​தில் கூடுதலாக நடக்கிறது.

இதனால் மதுப்​பிரியர்​கள் கடும் மன உளைச்​சலில் உள்​ளனர். இந்​தப் பிரச்​சினைக்கு தீர்வு காண அரசு மற்​றும் டாஸ்​மாக் நிர்​வாகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றும் ஏஜென்ட்​களின் மூலம் நடை​பெறும் கொள்​ளையை தடுக்க வேண்​டும் எனவும் வாடிக்​கை​யாளர்​கள் கோரிக்கை விடுக்​கின்​றனர்.

SCROLL FOR NEXT