தமிழகம்

பேரவை எதிர்க்கட்சித் தலைவரா? - உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக செயல்​படு​வீர்​களா? என்ற கேள்விக்கு திமுக இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின் பதிலளித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில் மக்​களுக்​காக சிறப்​பான பணி​களை மேற்​கொண்​டோம். இதனால் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மிகப்​பெரும் வெற்​றியை எதிர்​பார்த்​தேன்.

எனினும், மக்​கள் அளித்​திருக்​கும் தீர்ப்பை தலை​வணங்கி ஏற்​கிறோம்; மதிக்​கிறோம். சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக யார் பொறுப்​பேற்​பது என்​பது குறித்துகட்​சித் தலை​வரும், பொதுச்​செய​லா​ள​ரும் முடிவு செய்​வார்​கள். யூகத்​துக்கு என்​னால் பதில் சொல்ல முடி​யாது.

மு.க.ஸ்​டா​லினை என் தந்​தை​யாக மட்​டும் பார்க்க மாட்​டேன். எனக்கு எப்​போதுமே அவர் தலை​வர்​தான். சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதி மக்​கள் மீண்​டும் எனக்கு வாய்ப்​பளித்து இருக்​கின்​றனர். அவர்​களது நம்​பிக்​கைக்கு பாத்​திர​மாக என்​னுடைய பணி​கள் இருக்​கும்.

எப்​போதும் சுய பரிசோதனை என்​பது தேவை​தான். திமுக பார்க்​காத தோல்​வி​யும் கிடை​யாது. திமுக பார்க்​காத வெற்​றி​யும் கிடை​யாது.

திருப்​பத்​தூர் தொகு​தி​யில் ஒரு வாக்கு வித்​தி​யாசத்​தில் திமுக வேட்​பாளர் பெரியகருப்​பன் தோல்​வியைத் தழு​வி​யிருக்​கிறார். இது தொடர்​பாக நீதி​மன்​றம் செல்​வதற்கு தி​முக தலை​வர் ஆலோ​சனை நடத்​தி​யிருக்​கிறார்​. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT