தமிழகம்

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 61 அதிநவீன புதிய பேருந்துகள் இயக்கம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழகத்​தின் 61 அதிநவீன புதிய பேருந்​துகளின் இயக்​கத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

அரசு விரைவு போக்​கு​வரத்​துக்கழகம் சார்​பில் சென்​னை​யில் இருந்து தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்​கும், ஆந்​தி​ரா, கர்​நாட​கா, கேரளா உள்​ளிட்ட அண்டை மாநிலங்​களின் முக்​கிய நகரங்​களுக்​கும் அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதற்​கிடையே கடந்த டிச.24-ம் தேதி ரூ.34.30 கோடி மதிப்​பிலான பல அச்​சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்​சாதன சொகுசு பேருந்​துகளின் இயக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

மேலும் அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழகத்​துக்கு நவீன தொழில்​நுட்​பத்​துடன் கூடிய இருக்கை மற்​றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், சென்னை தீவுத்​திடலில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ரூ.37.98 கோடி மதிப்​பிலான இருக்கை மற்​றும் படுக்கை வசதி​யுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்​துகளின் இயக்​கத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இந்​தப் பேருந்​துகளில் மாற்​றுத் ​திற​னாளி​கள், முதி​யோர், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் எளி​தாக பயணிக்​கும் வகை​யில் சிறப்பு அம்​சங்​கள் செய்​யப்​பட்டுள்​ளன. இந்​தி​யா​விலேயே முதல்​முறை​யாக அரசு விரைவு போக்​கு​வரத்​துக்கழகத்​தில், பயணி​களின் சொகுசு பயணத்​துக்​காக முன்​புற ஏர் சஸ்​பென்​ஷன் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

படுக்கை வசதி​யானது அதிக இடத்​துட​னும், 2 படுக்​கைகளுக்கு இடையே தடுப்பு வசதி​யுடன் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் பயணி​களுக்கு நடத்​துநர் தகவல்​களை அறி​விப்​ப​தற்​காக ஒலிபெருக்​கி, டிஜிட்​டல் கடி​காரம் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

பிரேக்​கிங் செயல் திறனுக்​காக நவீன எலெக்ட்​ரானிக் மேக்​னடிக் ரிடார்​டர் நிறு​வப்​பட்​டுள்​ளது. இன்​ஜின் தீயை முன்​கூட்​டியே திறம்பட அனு​மானிக்​கும் தீ கட்​டுப்​பாட்டு கரு​வி​யும் பொருத்​தப்​பட்​டுள்​ளது.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள் சா.சி.சிவசங்​கர், பி.கே.சேகர்​பாபு, சென்னை மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார், போக்​கு​வரத்​துத் துறை செயலர் சுன்​சோங்​கம் ஜடக் சிரு, அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண்​ இயக்​குநர்​ ரா.மோகன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT