தமிழகம்

திமுக எம்எல்ஏக்களை கைது செய்வதே முழுநேர பணி: தவெக அரசு மீது உதயநிதி விமர்சனம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: ​தி​முக எம்​எல்​ஏக்​களை கைது செய்​வதை​யும், அதி​முக எம்​எல்​ஏக்​களை விலைக்கு வாங்​கு​வதை​யும் தவெக அரசு முழுநேரபணி​யாகச் செய்து வரு​கிறது என்​று, எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி விமர்​சித்​துள்​ளார்.

தமிழக முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக​வும், மிரட்​டும் தொனி​யிலும் பேசி​ய​தாக கைது செய்​யப்​பட்ட விளாத்​திக்​குளம் தொகுதி எம்​எல்ஏ .​வி.​மார்க்​கண்​டேயன், பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். கடந்த ஒரு வார​மாக சிறை​யில் உள்ள அவரை, திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி.முன்​னாள் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, ரகுபதி ஆகியோர் சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், எதிர்க்கட்​சித்தலை​வர் உதயநி​தி, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறைக்கு நேற்று வந்து மார்க்​கண்​டேயனை சந்​தித்து நலம் விசா​ரித்​தார். 30 நிமிடங்​கள் நடந்த இந்த சந்​திப்​பின்​போது, ‘மார்க்​கண்​டேயனுக்கு தேவை​யான சட்ட உதவி​களை திமுக வழங்​கும்’ என்​று உதயநிதி உத்​தர​வாதம் அளித்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் உள்ள மார்க்​கண்​டேயன் நலமுடன் தைரியமாக இருக்​கிறார்.

எதிர்க்​கட்​சிகள் மீது கைது நடவடிக்கை மேற்​கொள்​வதை மட்​டுமே இந்த அரசு பணி​யாக மேற்​கொண்டு வரு​கிறது. இந்த அரசு வேறு எதையும் செய்​ய​வில்​லை. தமிழக வெற்றி கழகத்​தின் நிர்​வாகிகள் மீது அவர்​கள் கட்​சியினரே பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்​துள்​ளார்​கள். அதுகுறித்து சட்​டப்​பேர​வை​யில் பேசி​யுள்​ளேன். ஆனால், அந்த நபர்​கள் மீது எந்த நடவடிக்​கை​யும் இது​வரை எடுக்​க​வில்​லை.

திமுக நிர்​வாகி​களை​யும், எம்​எல்​ஏக்​களை​யும் கைது செய்​வதும், அதி​முக எம்​எல்​ஏக்​களை சோபா கொடுத்து விலைக்கு வாங்​கு​வதை​யும், இந்த அரசு 24 மணி நேர​மும் முழு நேரப் பணி​யாக மேற்​கொண்டு வரு​கிறது. சோபா கொடுத்து யாரை விலைக்கு வாங்​கி​னார்​கள் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.அப்​போது, தமிழக சட்​டப்​பேரவை முன்​னாள் தலை​வர்​கள் ஆவுடையப்​பன், அப்​பாவு,முன்​னாள் அமைச்​சர்​கள் கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், அப்​துல்​வ​காப் எம்​எல்ஏ உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

SCROLL FOR NEXT