நாகையில் நேற்று நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா மலரை வெளியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர்.

 
தமிழகம்

“திராவிட இயக்கம் இருக்கும்வரை நாகூர் ஹனிபா குரல் ஒலிக்கும்” - துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: ​தி​ரா​விட இயக்​கம் இருக்​கும் வரை நாகூர் ஹனி​பா​வின் குரல் ஒலிக்​கும் என்று அவரது நூற்​றாண்டு விழா​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் குறிப்​பிட்​டார்.

பிரபல பாடகரும், திரா​விட இயக்​கத்​தைச் சேர்ந்​தவரு​மான இசை​முரசு நாகூர் ஹனிபா நூற்​றாண்டு விழா தமிழக அரசு சார்​பில் நாகை​யில் நேற்று நடை​பெற்​றது. தமிழ்​நாடு மீன்​வளப் பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெற்ற இந்த விழா​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்​து​கொண்​டு, விழா மலரை வெளி​யிட்​டார்.

தொடர்ந்​து, நாகூர் ஹனி​பா​வின் வாரிசுகள் நவ்​ஷாத் அலி, நாஸர் அலி, நஸீமா பேகம், மும்​தாஜ் பேகம் குடும்​பத்​தினர், ஜரீனா பேகம் குடும்​பத்​தினர் கவுரவிக்​கப்​பட்​டனர். முன்​ன​தாக, சில்​லடி கடற்​கரை​யில் நாகூர் ஹனிபா பெயரில் அமைக்​கப்​பட்​டுள்ள பூங்​காவை​யும் உதயநிதி திறந்து வைத்​தார். விழா​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சென்​னை​யில் வரும் 24-ம் தேதி நடை​பெறும் இசை​முரசு நாகூர் ஹனிபா புத்தக வெளி​யீட்டு விழா​வில் தமிழக முதல்​வர் பங்​கேற்​கிறார். மறைந்த திமுக தலை​வர் கருணாநி​தி, நாகூர் ஹனிபா ஆகியோரது குரல்​கள்​தான் 75 ஆண்​டு​களாக திமுக மேடை​யில் உச்​சரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

வக்பு வாரி​யத் தலை​வ​ராக இருந்து இஸ்​லாமிய மக்​களுக்கு சேவை செய்​தவர் நாகூர் ஹனி​பா. அவரது காலடிச் சுவடு​கள் இந்த மண்​ணில் இருக்​கும்​வரை, அவரது குரல் காற்​றில் கலந்​துள்ள வரை, தமிழகத்​தில் இந்தி திணிப்பை பாஜக அரசு செய்​ய​முடி​யாது. இந்த மண்​ணில் திரா​விட இயக்​கம், இஸ்​லாமிய நெறி உள்ள வரைக்​கும் நாகூர் ஹனி​பா​வின் குரல் ஒலிக்​கும்.

இஸ்​லாமிய மக்​களுக்​காக ஏராள​மான திட்​டங்​களை திமுக அரசு செயல்​படுத்​தி​யுள்​ளது. எனவே, திரா​விட மாடல் அரசுக்கு இஸ்​லாமியர்​கள் உறு​துணை​யாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். விழா​வில், அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, நாகை எம்​.பி. வை.செல்​வ​ராஜ், எம்​எல்​ஏ-க்​கள் முகமது ஷாந​வாஸ், நாகை​மாலி, தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறைச் செய​லா​ளர் ராஜா​ராமன், மாவட்ட ஆட்​சி​யர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலை​வர் கவுதமன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT