மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய மின்சாரப் பேருந்து பணிமனையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, 145 புதிய மின்சார பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர்.

 
தமிழகம்

மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 194 புதிய பேருந்துகளின் சேவை: உதயநிதி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்​னை: மாநகர போக்குவரத்து கழகத்​துக்​கு, குளிர்​சாதன வசதி கொண்ட 100 பேருந்​துகள் உட்பட 194 புதிய பேருந்​துகளின் சேவையை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்​தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்​தில், உலக வங்கி மற்​றும் ஆசிய உள்​கட்​டமைப்பு முதலீட்டு வங்​கி​யின் பங்​களிப்​புடன், சென்னை பெருநகர கூட்​டாண்மை திட்​டத்​தின் கீழ் புதிய மின்​சார பேருந்து​கள் இயக்​கப்​படு​கின்​றன.

          

அதன்படி, சென்​னை​யில் 4-வது கட்​ட​மாக, ரூ.52 கோடி மதிப்​பில், பல்​ல​வன் மத்​திய பணிமனை​யில் மின்​சா​ரப் பேருந்து பணிமனை மற்​றும் ரூ.248.25 கோடி மதிப்​பில் 100 குளிர்​சாதன வசதி கொண்ட மின்​சார பேருந்​துகள், 45 புதிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்​தார்.

இது​போல, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்​துக்​கு, ரூ.30.50 கோடி மதிப்​பிலான இருக்கை மற்​றும் படுக்கை வசதி​யுடன் கூடிய 49 அதிநவீன சொகுசு பேருந்​துகளின் இயக்​கத்​தை​யும் அவர் தொடங்கி வைத்​தார்.

இதில், போக்குவரத்து துறை அமைச்​சர் சிவசங்​கர், இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு, போக்குவரத்துத்துறை செயலர் சுன்​சோங்​கம்​ஜடக் சிரு உட்பட பலர் பங்​கேற்​றனர்.

29 வீரர்களுக்கு நிதியுதவி

தேசிய அளவில் நடை​பெற்ற டேக்​வாண்​டோ, தடகளம், நீச்​சல் மற்​றும் கால்​பந்து போட்​டிகளில் பதக்​கம் வென்ற மாற்​றுத் திற​னாளி​களான 29 வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.24 லட்ச நிதி​யுதவிக்​கான காசோலை​யை, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார்.

SCROLL FOR NEXT