தமிழகம்

​பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்​தைப் புறக்​கணிக்​கும் பாஜக​வுக்கு தேர்​தலில் பாடம் புகட்ட வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வலி​யுறுத்தி உள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் திரு​வொற்​றியூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி வேட்​பாளர் எல்​.சுந்​தர்​ராஜை ஆதரித்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் எல்​லை​யம்​மன் கோயில் பகு​தி​யில் நேற்று பரப்​புரை மேற்​கொண்​டார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: கம்​யூனிஸ்ட் கட்​சிக்​கும் முன்​னாள் முதல்​வர் கருணாநி​திக்​கும் நெருங்​கிய தொடர்பு உண்​டு, பெரி​யாரை சந்​திக்​க​வில்லை என்​றால் கம்​யூனிஸ்ட் கட்​சி​யில் சேர்ந்​திருப்​பேன் என அவரே கூறி​யுள்​ளார். தோழர் சுந்​தர்​ராஜ் ஒரு தொழிலா​ளி​யாக வாழ்​கையை தொடங்​கிய​வர். இந்த தொகு​தி​யில் உள்ள தொழிலா​ளர்​களின் பிரச்​சனை​களை அறிந்​தவர்.

தேர்​தல் நேரத்​தில் மட்​டும் அவர் உங்​களை சந்​திப்​பவர் அல்ல எப்​போதும் மக்​களோடு மக்​களாக இருப்​பவர். இந்த தொகு​திக்கு திமுக அரசு பல திட்​டங்​களை செயல்​படுத்​தி​யுள்​ளது. குறிப்​பாக எண்​ணூர், நெட்​டக்​குப்​பம், கொசஸ்​தலை ஆறு பகு​தி​யில் தூண்​டில் வளைவு, விம்கோ நகர், அண்​ணா​மலை நகரில் ரயில்வே சுரங்​க​பாதை, கத்​தி​வாக்​கத்​தில் நவீன மீன் அங்​காடி என பல திட்​டங்​களை செயல்​படுத்​தி​யுள்​ளோம். நம் வேட்​பாளரை வெற்றி பெற வைத்​தால் மேலும் பல திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும்.

இதே​போல பல திட்​டங்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அனைத்து தரப்பு மக்​களுக்​கும் செயல்​படுத்​தி​யுள்​ளார். மேலும் பல புதிய திட்​டங்​களை செயல்​படுத்த உள்​ளார். இந்த தேர்​தல் தமிழக அணி மற்​றும் டெல்லி அணி இடையே​யான தேர்​தல். மத்​திய பாஜக அரசு கடந்த ஐந்து ஆண்​டு​களில் தமிழகத்​துக்கு ஏதாவது செய்​துள்​ள​தா, பட்​ஜெட்​டில் தமிழ்​நாடு என்ற பெயர் கூட இடம்​பெற​வில்​லை. தமிழகத்தை மத்​திய பாஜக அரசு புறக்​கணிக்​கிறது.

அதற்​காக இந்​தத் தேர்​தலில் பாஜக​வுக்கு பாடம் புகட்ட வேண்​டும். மறை​முக​மாக முகமூடி அணிந்து பாஜக வரு​கிறது. பாஜகவை விரட்டி அடிக்க வேண்​டிய நேரம் இது. அடிமை கூட்​டம், சங்கி கூட்​டத்தை நாம் நுழைய விடக்​கூ​டாது. தி​முக வெற்றி பெற்​று தி​ரா​விட மாடல்​ 2.0 அரசு தொடர வேண்​டும்.

SCROLL FOR NEXT