தமிழகம்

வடபழனி, சமயபுரம் கோயில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்: முறைகேடு புகாரில் அமைச்சர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ​வடபழனி சுப்​பிரமணிய சுவாமி கோயில் மற்​றும் திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் நடந்த முறை​கேடு​கள், நிர்​வாக சீர்​கேடு​கள் தொடர்​பாக 2 ஊழியர்​களை பணி​யிடை நீக்​கம் செய்து இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

கடந்த சில நாட்​களுக்கு முன்பு வடபழனி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் அமைச்​சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். அப்​போது, கோயில் நிர்​வாகத்​தில் சில முறை​கேடு​களும் குளறு​படிகளும் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.

இந்​நிலை​யில், நிர்​வாக சீர்​கேடு​களுக்கு காரண​மாக கருதப்​படும் இளநிலை உதவி​யாளர் ஹரி கோவிந்த் என்​பவரை பணி​யிடை நீக்​கம் செய்து அமைச்​சர் உத்​தர​விட்​டுள்​ளார்.

அதே​போல், திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் மணி​யக்​கார​ராக பணிபுரி​யும் பழனி என்​பவர், வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக புகார்​கள் எழுந்​தன. இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்​புத்​துறை டிஎஸ்பி மணி​கண்​டன் தலை​மையி​லான போலீ​ஸார்.

சில நாட்​களுக்கு முன்பு அவரிடம் விசா​ரணை நடத்​தினர். அந்த விசா​ரணை​யின் அடிப்​படை​யில், பொது நலன் மற்​றும் நிர்​வாக நலன் கருதி பழனியை பணி​யிடை நீக்​கம் செய்து அமைச்​சர் ரமேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

கோயில் நிர்​வாகத்​தில் தவறு செய்​பவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை தொடரும் என அமைச்​சர் எச்​சரித்​துள்​ள​தாக அறநிலை​யத்​துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT