தமிழகம்

கனடா பயிற்சி விமான விபத்தில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 2 விமானிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ரெஜினா: க​ன​டா​வில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்​கிய​தில் தமிழகம், புதுச்​சேரியைச் சேர்ந்த 2 விமானிகள் உயி​ரிழந்​தனர்.

கனடாவைச் சேர்ந்த ஹார்வ்ஸ் ஏர் என்ற நிறு​வனம் வின்​னிபெக் நகரில் இரு விமான பயிற்சி மையங்​களை நடத்தி வரு​கிறது. இந்த நிறு​வனத்​தில் தமிழகத்​தைச் சேர்ந்த மனோஜ் சிவகு​மார், புதுச்​சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திரு​ஞானசம்​பந்​தம் ஆகியோர் பயிற்சி பெற்று விமானிக்​கான உரிமத்​தைப் பெற்​றனர்.

சரக்கு விமானங்​களில் விமானி​யாக பணி​யில் சேர குறைந்​த​பட்​சம் 200 மணி நேரம் விமானத்தை இயக்​கி​யிருக்க வேண்​டும். அதற்​காக இரு​வரும் ஹார்வ்ஸ் ஏர் நிறு​வனத்​தின் செஸ்னா 172 ரக பயிற்சி விமானத்தை வாடகைக்கு எடுத்து இயக்கி வந்​தனர். இதன்​படி கடந்த 18-ம் தேதி மனோஜும் ஸ்ரீசரணும் கனடா​வின் ரெஜினா விமான நிலை​யத்​தில் இருந்து ஸ்டீன்​பாக் நகருக்கு பயிற்சி விமானத்​தில் புறப்​பட்​டனர்.

ரெஜினா நகர் அருகே மூஸ் மவுன்ட்​டன் பூங்கா வனப் பகு​தி​யில் பயிற்சி விமானம் பறந்​த​போது எதிர்​பா​ராத​வித​மாக தரை​யில் விழுந்து நொறுங்​கியது. இதில் இரு விமானிகளும் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். நீண்ட தேடு​தலுக்​குப் பிறகு கனடா போலீ​ஸார் விபத்து நேரிட்ட இடத்​தைக் கண்​டு​பிடித்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். உடல்கரு​கிய நிலை​யில் இரு விமானிகளின் உடல்​களும் மீட்​கப்பட்​டன. இந்த விபத்​துக்​கான காரணம் குறித்து உயர்​நிலை விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​திய துணை தூதரகம் இரங்​கல்: இதுதொடர்​பாக கனடா​வின் வான்​கூவர் நகரில் உள்ள இந்​திய துணை தூதரகம் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “கனடா பயிற்சி விமான விபத்​தில் தமிழகத்​தைச் சேர்ந்த மனோஜ் சிவகு​மார், புதுச்​சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திரு​ஞானசம்​பந்​தம் ஆகியோர் உயி​ரிழந்​துள்​ளனர். அவர்​களை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு தூதரகம் சார்​பில் இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறோம். இரு​வரின் உடல்​களை இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்க தேவை​யான அனைத்​து உதவி​களும்​ வழங்​கப்​படும்​” என தெரி​வித்​துள்ளது.

SCROLL FOR NEXT