ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் மாநிலம் வடினார் வந்து சேர்ந்த இந்திய டேங்கர் கப்பல் நந்தா தேவி. படம்: பிடிஐ

 
தமிழகம்

46,000 மெட்ரிக் டன் எல்பிஜி நிரப்பிய 2 கப்பல்கள் விரைவில் தமிழகம் வருகின்றன

செய்திப்பிரிவு

அகமதாபாத்: சு​மார் 46,000 மெட்​ரிக் டன் எல்​பிஜி காஸ் நிரப்​பிய இந்​திய டேங்​கர் கப்​பல் நந்தா தேவி நேற்று குஜ​ராத் வந்​தடைந்​தது. அதில் உள்ள எல்​பிஜி காஸ் 2 தனி கப்​பல்​களுக்கு மாற்​றப்​பட்டு தமிழ்​நாட்​டுக்கு அனுப்பி வைக்​கப்பட உள்​ளன.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தொடங்​கிய கூட்​டுத் தாக்​குதல் போராக மாறியது. இதில் உலக நாடு​களுக்கு சரக்​குக் கப்​பல் செல்​லக் கூடிய ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முடக்​கியது. மீறிச் செல்​லும் கப்​பல்​கள் தாக்​கப்​படும் சூழல் உள்​ளது.

          

இந்த சூழலில் மத்​திய அரசு மேற்​கொண்ட முயற்​சி​யால் இந்​தி​யக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல ஈரான் சிறப்பு அனு​மதி கொடுத்​தது.

இதையடுத்து 40,000 மெட்​ரிக் டன் எல்​பிஜி காஸ் நிரப்​பிய ஷிவாலிக் என்ற டேங்​கர் கப்​பல் ஹார்​முஸ் ஜலசந்​தியை பத்​திர​மாக கடந்து நேற்று முன்​தினம் குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகம் வந்து சேர்ந்​தது.

இந்​நிலை​யில் சுமார் 46,000 மெட்​ரிக் டன் எல்​பிஜி காஸ் நிரப்​பிய நந்தா தேவி என்ற மற்​றொரு டேங்​கர் கப்​பல் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து நேற்று அதி​காலை​யில் குஜ​ராத் வந்து சேர்ந்​தது. நந்தா தேவி டேங்​கர் கப்​பல் குஜ​ராத்​தின் கண்ட்லா துறை​முகத்​தில் நிறுத்​தப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் அதற்கு பதிலாக இக்​கப்​பல் வடி​னார் அரு​கில் நடுக்​கடலில் நிறுத்​தப்​பட்​டது.

அதில் உள்ள எல்​பிஜி காஸ், எம்டி பிடபிள்யூ பிரீஸ் மற்​றும் எம்டி ஜக் பிர​தாப் ஆகிய 2 தனி கப்​பல்​களுக்கு மாற்​றப்​படும். அதன் பிறகு இரு கப்​பல்​களும் தமிழ்​நாட்​டுக்கு அனுப்பி வைக்​கப்​படும் என அதி​காரி​கள் நேற்று தெரி​வித்​தனர்.

நாடு முழு​வதும் சமையல் காஸ் தட்​டுப்​பாடு நில​வும் சூழலில் 2 நாட்​களில் 2 எல்​பிஜி கப்​பல்​கள் இந்​தியா வந்​திருப்​பது மிகப்​பெரிய நிவாரண​மாக இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தற்​போது வளை​கு​டா​வில், மொத்​தம் 611 மாலுமிகளு​டன் இந்​தி​யக் கொடியேற்​றப்​பட்ட 22 கப்​பல்​கள் உள்​ளன. ஐக்​கிய அரபு அமீர

கத்​தில் இருந்து சுமார் 81,000 டன் கச்சா எண்​ணெ​யுடன் இந்​தி​யக் கொடியேற்​றப்​பட்ட ‘ஜக் லட்​கி' எண்​ணெய்க் கப்​பலும் பாது​காப்​பாக இந்​தி​யாவை நோக்​கிப்​ பயணித்​து வரு​வ​தாக அ​தி​காரி ஒருவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT