டி. லிங்கேஸ்வரன், பி.கார்த்திகேயன்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 66 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.
9 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வரும் டி.லிங்கேஸ்வரன் மற்றும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் பி.கார்த்திகேயன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் விரைவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.