தமிழகம்

கென்யாவில் இருந்து சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னை வந்த 2 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கென்யாவில் இருந்து சிகிச்​சைக்​காக, விமானம் மூலம் சென்னை வந்த 2 மாத குழந்தை உயிர்​இழந்​தது. கென்யா நாட்டை சேர்ந்த தம்​பதி முவய், முதொனி.

இவர்​களுக்கு 58 நாட்​களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்​து. அந்த குழந்​தைக்கு எலினா என பெயர் வைத்​தனர். குழந்தை பிறந்​த​தில் இருந்தே உடல்​நலம் பாதிக்​கப்​பட்டு இருந்​தது. அங்​குள்ள மருத்​து​வர்​கள் பரிசோதனை செய்​த​தில், குழந்​தை​யின் இதயத்​தில் ஓட்டை இருப்​பது தெரிய​வந்​தது.

அங்கு சிகிச்சை பெற்​றும் சரி​யா​காத​தால், மருத்​து​வர்​களின் பரிந்​துரை​யின்​படி குழந்​தையை சிகிச்​சைக்​காக சென்​னைக்கு அழைத்து செல்ல பெற்​றோர் முடிவு செய்​தனர்.

கென்​யா​வில் இருந்து சென்​னைக்கு நேரடி விமான சேவை இல்​லாத​தால், குழந்​தை​யுடன் துபாய் வந்த பெற்​றோர், துபாயி​லிருந்து எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் மூலம் சென்​னைக்கு வந்து கொண்​டிருந்​தனர்.

விமானம் சென்​னையை நெருங்கி கொண்​டிருந்த போது, குழந்​தைக்கு உடல்​நிலை பாதிக்​கப்​பட்​டது. இதுபற்​றி, விமான பணிப்​பெண்​களிடம் பெற்​றோர் தகவல் தெரி​வித்​தனர். அவர்​கள் விமானி​யிடம் கூறினர்.

உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்​டு, விவரத்தை தெரி​வித்​து, விமான நிலைய மருத்​துவ குழு​வினரை தயார் நிலை​யில் வைக்​கு​மாறும், விமானத்​துக்கு முன்​னுரிமை அளித்து தரை​யிறங்க ஏற்​பாடு செய்​யு​மாறும் கேட்டு கொண்​டார்.

இதன்​படி, நேற்று காலை 8.15 மணிக்கு சென்​னை​யில் தரை​யிறங்க வேண்​டிய விமானம், 23 நிமிடங்​கள் முன்​ன​தாக காலை 7.52 மணிக்கு சென்​னை​யில் தரை​யிறங்​கியது.

உடனடி​யாக, விமான நிலைய மருத்​து​வக் குழு​வினர் விமானத்​துக்​குள் சென்று குழந்​தையை பரிசோதனை செய்​தனர். ஆனால், குழந்தை உயி​ரிழந்​திருப்​பது தெரிய வந்​தது. இதனை கேட்ட பெற்​றோர் கதறி அழுதனர்.

சக பயணி​கள் சோகத்​தில் ஆழ்ந்​தனர். இதுபற்றி விமான நிலைய போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. விரைந்து வந்த போலீ​ஸார் குழந்​தை​யின் உடலை கைப்​பற்​றி, பிரேத பரிசோதனைக்​காக செங்​கல்​பட்டு அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

கென்​யா​வில் இருந்து சிகிச்​சைக்​காக சென்னை வந்த 2 மாத குழந்தை உயி​ரிழந்த சம்​பவம், சென்னை விமான நிலைய ஊழியர்​கள், பயணி​களிடையே சோகத்தை ஏற்​படுத்​தியது.

SCROLL FOR NEXT