சென்னை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏ.சுகந்தி ஆகியோரை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஆளுநர் அர்லேகர் நியமித்துள்ளார்.
இவர்களது பதவிக் காலம் 3 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை. இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை இப்பதவியில் இருப்பார்கள் என்று தமிழக பொதுத் துறை செயலர் இ.சுந்தரவல்லி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.