அஜிதா ஆக்​னல், விஜய்யுடன் அஜிதா

 
தமிழகம்

பதவி வழங்காமல் புறக்கணித்ததால் வேதனை: தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

செய்திப்பிரிவு

தூத்​துக்​குடி: தவெகவில் 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக களப் பணி​யாற்றி வந்த நிலை​யில், பதவி வழங்​காமல் புறக்​கணித்​த​தால் தூத்​துக்​குடியை சேர்ந்த பெண் நிர்​வாகி அஜிதா ஆக்​னல் நேற்று தூக்க மாத்​திரை சாப்​பிட்டு தற்​கொலைக்கு முயன்​றார்.

தூத்​துக்​குடி லயன்ஸ் டவுன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் அஜிதா ஆக்​னல். ஆசிரியர் பயற்சி முடித்த இவர், தவெகவில் இணைந்து தீவிர​மாக களப் பணி​யில் ஈடு​பட்டு வந்​தார்.

முக்​கிய நாட்​களில் தவெக சார்​பில் பல்​வேறு நிகழ்ச்​சிகளை நடத்​தி​யதுடன், நலத்​திட்ட உதவி​கள் வழங்​குதல், கண் சிகிச்சை முகாம்​கள் நடத்​துதல் உள்​ளிட்​ட​வற்​றி​லும் ஈடு​பட்டு வந்​தார்.

தொடக்​கத்​தில் தூத்​துக்​குடி மாவட்​டப் பொறுப்​பாள​ராக தன்னை தெரி​வித்​துக் கொண்​டதுடன், கட்​சி​யில் தனக்கு முன்​னுரிமை அளித்து பொறுப்பு வழங்​கப்​படும் என்று அவர் காத்​திருந்​தார். அவரது ஆதர​வாளர்​களும் நம்​பிக்​கை​யுடன் இருந்​தனர்.

இந்​நிலை​யில், சில நாட்​களுக்கு முன்பு நடிகர் விஜய் பனையூரில் நடந்த நிகழ்ச்​சி​யில் மாவட்​டச் செய​லா​ளர் மற்​றும் பொறுப்​பாளர்​களை நியமித்​து, அதற்​கான உத்​தரவை வெளி​யிட்​டார். இதில், அஜிதா ஆக்​னலுக்கு பொறுப்பு எது​வும் வழங்​கப்​பட​வில்​லை.

இதனால் ஏமாற்​றமடைந்த அஜிதா ஆக்​னல், பனையூரில் நடிகர் விஜய் காரை தடுத்து நிறுத்த முயன்​றார். அப்​போது அவர் தள்ளி விடப்​பட்​டார். தொடர்ந்​து, பனையூரில் தர்​ணா​வில் ஈடு​பட்​டார். அப்​போதும் அவருக்கு பதவி எது​வும் வழங்​கப்​பட​வில்​லை.

இதனால் மனமுடைந்த அவர் அங்​கிருந்து தூத்​துக்​குடிக்கு வந்த நிலை​யில் உற்​சாகமிழந்து காணப்​பட்​டதுடன், சரி​யாக உணவருந்​த​தாமல் இருந்து வந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று அவர் தூக்க மாத்​திரைகள் தின்​று, தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். பாளை​யங்​கோட்டை சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட அஜி​தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இது தொடர்​பாக தூத்​துக்​குடி தென்​பாகம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். தவெ​க​வில் பதவி வழங்​காமல் உதாசீனப்​படுத்​தி​ய​தால் இளம்​பெண் தற்​கொலைக்கு முயன்ற சம்​பவம் தூத்​துக்​குடி​யில் பரபரப்பை ஏற்​படுத்​தியுள்ளது.

SCROLL FOR NEXT