தமிழகம்

உழைப்புக்கு உரிய அங்கீகாரம் இல்லையா? - விஜய்யின் காரை மறித்து நியாயம் கேட்ட பெண் நிர்வாகி

துரை விஜயராஜ்

தனக்கு மாவட்​டச் செய​லா​ளர் பதவி வழங்​காத​தால் அதிருப்​தி​யில் தவெக தலை​வர் விஜய்​யின் காரை பெண் நிர்​வாகி ஒரு​வர் தனது ஆதர​வாளர்​களு​டன் வழிமறித்த சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தவெக-​வில் ஏற்​கெனவே 120 மாவட்​டச் செய​லா​ளர்​கள் அறிவிக்​கப்​பட்​டனர். இருப்​பினும் தூத்​துக்​குடி உட்பட சில மாவட்ட தொகு​தி​களுக்​கான மாவட்​டச் செய​லா​ளர் மற்​றும் நிர்​வாகி​கள் நியமனம் அறிவிக்​கப்​ப​டா​மல் இருந்​தது. இதை​யொட்டி மீத​முள்ள மாவட்​டங்​களுக்​கான மாவட்​டச் செய​லா​ளர்​களை அறிவிக்​கும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்சி தலை​வர் விஜய் தலைமை வகித்து புதிய மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு அறி​விப்​பாணை​களை வழங்​கி​னார்.

இதை​யொட்டி கட்சி நிர்​வாகி​கள் காலை முதலே பனையூரில் திரளாக குவிந்​தனர். இதற்​கிடையே தூத்​துக்​குடி மத்​திய மாவட்​டச் செய​லா​ள​ராக சாமுவேல் என்​பவர் நியமிக்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யானது. அந்​தப் பதவி தனக்கு வழங்​கப்​படும் என எதிர்ப்​பார்த்து காத்​திருந்த பெண் நிர்​வாகி​யான அஜிதா ஆக்​னல், பட்​டியலில் தன் பெயர் இல்​லாத​தால் அதிருப்​தி​யில் தனது ஆதர​வாளர்​களு​டன் கட்சி அலு​வல​கத்​துக்கு வந்து விஜய்யை சந்​தித்து பேச முற்​பட்​டார்.

ஆனால், பாது​காப்பு பணி​யில் இருந்​தவர்​கள் அவர்​களை உள்ளே செல்ல அனு​ம​திக்​க​வில்​லை. கட்​சி​யின் நீண்ட காலம் உழைத்​தவர் களுக்கு உரிய அங்​கீ​காரம் வழங்​கப்​பட​வில்லை என நிர்​வாகி அஜிதா கண்​ணீர் மல்க தனது அதிருப்​தியை வெளிப்​படுத்​தி​னார். தொடர்ந்து பனையூர் அலு​வல​கத்​துக்கு வருகை தந்த விஜய்​யின் காரை ஆதர​வாளர்​களு​டன் வழிமறித்து அவரிடம் பேச முற்​பட்​டார். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டது. உடனடி​யாக அவரை பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தவர்​கள் அங்​கிருந்து அப்​புறப்​படுத்​தினர். எனினும் கட்சி அலுவலகம் முன்பு அஜிதா தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்​னர், கட்​சி​யின் இணை பொதுச்​செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் அஜி​தாவுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி விஜய்​யிடம் பேசிக்​கொள்​ளலாம் எனச் சொல்லி அனுப்பி வைத்​தார். இதுதொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் நிர்​மல்​கு​மார் கூறிய​தாவது:

கட்​சி​யில் பொறுப்​பு​கள் வழங்​கும் போது ஒரு சில இடங்​களில் அதிருப்தி வரு​வது இயல்​பு​தான். இது எல்லா கட்​சிகளி​லும் இருக்​கக் கூடியது தான். கடந்த வாரம் கூட திமுக முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் முதல்​வரை பார்க்க முடி​யாத​தால், அறி​வால​யத்​தின் வெளியே தனது உறுப்​பினர் அட்​டையை தூக்கி எறிந்​து​விட்​டுச் சென்​றார்.

இவ்​வாறு கட்​சிகளில் ஒவ்​வொருத்​தருக்​கும் ஒரு மனவ​ருத்​தம் இருக்​கும். திமுக-வை விட தவெக-​வில் ஜனநாயகம் அதி​க​மாக உள்​ளது. அதி​கள​வில் நிர்​வாகி​கள் நியமிக்​கப்பட்​டுள்​ளனர். யார், யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்​டுமோ, கட்சி தலை​வர் முடி​வெடுத்து வழங்கி வரு​கி​றார். கட்​சிக்​காக உழைத்​தவர்​கள் யாரை​யும் விஜய் கைவிட​மாட்​டார். அனை​வரை​யும் அரவணைப்​பார் என்றார்.

SCROLL FOR NEXT