நயினார் நாகேந்திரன் |கோப்புப் படம்

 
தமிழகம்

விஜய் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது: நயினார் நாகேந்திரன் உறுதி

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் விஜய்​யின் தவெக கட்சி எந்த இடத்​தி​லும் வெற்றி பெறாது என்​று, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

கன்​னி​யாகுமரி பகவதி அம்​மன் கோயி​லில் தரிசனம் செய்த பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: திமுக கூட்​டணி சார்​பில் கருத்து திணிப்பு நடந்​துள்​ளது. திமுக அரசுக்கு எதி​ரான மனநிலை​யில் மக்​கள் இருந்​துள்​ள​தாக அறிகிறேன்.

அரசு ஊழியர்​கள், அதி​காரி​கள், வியா​பாரி​கள், பெண்​கள் மிகப் பெரிய மாற்​றத்​துக்​காக வாக்​களித்​துள்​ளனர். நிச்​சய​மாக ஒரு மாற்​றம் வரும். என்னை பொறுத்​தவரை விஜய் கட்சி எந்த தொகு​தி​யிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்​லை.

உலக நாடு​களில் இன்று எவ்​வளவு மோச​மான சூழ்​நிலை உள்​ளது என்று தெரி​யும். பல நாடு​களில் சமையல் காஸ் கிடைப்​ப​தில்​லை. அமெரிக்கா - ஈரான் போரால் பல நாடு​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​தியா உலக நாடு​களோடு நட்பு நாடாக உள்​ளது. அதே​போல் பிரதமர் உலக தலை​வர்​களோடு நட்பு பாராட்டி வரு​கிறார். இதனால், தட்​டுப்​பாடு இன்றி சமையல் காஸ் கிடைத்து வரு​கிறது. மத்​திய அரசு மக்​கள் நலன் கருதி நல்ல முடிவை எடுக்​கும்.

SCROLL FOR NEXT