தமிழகம்

“கிழிந்த துணியை தைத்தது போல திமுக கூட்டணி ஒட்டு போட்ட கூட்டணி” - விஜய் கடும் தாக்கு

செய்திப்பிரிவு

கிழிந்​து​போன துணியை தைத்து வைத்​தது போல திமுக கூட்டணி ஒரு ஒட்டு போட்ட கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் சாடியுள்ளார்.

தவெக சார்​பில் போட்​டி​யிடும் 234 தொகு​தி​களின் வேட்​பாளர்​களை கட்​சி​யின் தலை​வர் விஜய் நேற்று சென்​னை​யில் அறி​முகப்​படுத்​தி​னார். அப்​போது விஜய் பேசி​ய​தாவது: இது வேட்​பாளர்​களை அறி​முகப்​படுத்​தும் கூட்​டம் அல்ல, மக்​களுக்​கான காப்​பாளர்​களை அறி​முகப்​படுத்​தும் கூட்​டம். நமது வேட்​பாளர்​கள் சாதாரண பின்​புலத்​தில் இருந்த வந்​தவர்​கள் என சொல்​லு​வார்​கள்.

          

ஒரு எம்​எல்ஏ எப்​படி இருக்க வேண்​டும் என்​றால், அனுபவத்தை வைத்து கொள்​ளை​யடிக்​காதவ​ராக, சட்​ட​விரோத மணல் குவாரி வைத்​திருக்​காதவ​ராக, கேள்வி கேட்​கும் பத்​திரி​கை​யாளர்​கள் தாக்​காதவ​ராக இருக்க வேண்​டும். எனவே, மக்​களு​டன் நிற்​கும் வேட்​பாளர்​களை நான் தேர்ந்​தெடுத்து உங்​கள் முன் அறி​முகப்​படுத்​துகிறேன். அவர்​களை எம்​எல்ஏ ஆக்க வேண்​டியது உங்​கள் பொறுப்​பு. இந்த தேர்​தல் இரு​முனைப் போட்டி மட்​டும்​தான்.

மக்​கள் கூட்​ட​ணி​யான நமக்​கும், ஸ்டா​லின் கூட்​ட​ணிக்​கும் இடையே​தான் போட்​டி. உடைந்த கண்​ணாடியை ஒட்​ட​வைத்​தது போல, கிழிந்த துணியை தைத்து வைத்​தது போல திமுக கூட்​டணி ஒரு ஒட்​டு போட்ட கூட்​ட​ணி. எனவே உங்​கள் வாக்​கு​களை சிந்​தாமல் சிதறாமல் விசில் சின்​னத்​தில் வாக்​களிப்​பீர்.

இது பாமரர்​களுக்​கும், ஒரு அதி​கார வர்க்​கத்​துக்கு சேவகம் செய்​யும் அடிமை​களுக்​கும் நடக்​கும் தேர்​தல். இது விஜய்க்​கும், ஸ்டா​லினுக்​கும் இடையே நடக்​கும் தேர்​தல்.

இந்த தேர்​தல் மன்​ன​ராட்​சி​யில் இருந்து மக்​களாட்​சியை மீட்​ப​தற்​கான தேர்​தல். தமிழகத்​தின் எதிர்​காலத்​துக்​காக எங்​களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்​கள்.

வாக்​குறு​தி​கள் அறி​விப்பு இளைஞர்​களுக்​காக தேர்​தல் வாக்​குறு​தி​களை அறிவிக்​கிறேன். போதைப்​பொருளை தடுக்க கடும் சட்​டங்​கள் கொண்டு வரப்​படும். பள்​ளி​களி​லும் கல்​லூரி​களி​லும் போதைப்​பொருள் எதிர்ப்பு மன்​றங்​கள் அமைக்​கப்​படும். 12 ஆம் வகுப்​புக்கு பிறகு பி.ஹெச்​.டி வரை பிணை​யம் இல்​லாமல் 20 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்​கப்​படும்.

TRATA வாயி​லாக அனைத்து மாநில அரசுப் பணி​களுக்​கும் ஒரு நிலை​யான ஆட்​சேர்ப்பு அட்​ட​வணை வெளி​யிடப்​படும். 29 வயதுக்​கும் மேல் வேலை​வாய்ப்பு இல்​லாத டிகிரி முடித்த இளைஞர்​களுக்கு 4000 ரூபா​யும் பாலிடெக்​னிக் முடித்த இளைஞர்​களுக்கு மாதம் 2000 ரூபா​யும் இளைஞர் நல நிதி​யாக வழங்​கப்​படும்.

பட்​ட​தா​ரி​களுக்கு மாதம் 10,000 ரூபா​யும் ஐ.டி. படித்​தவர்​களுக்கு 8000 ரூபாய் சம்​பள​மாக அரசே வழங்​கும்.

நேர்​மை​யான தொழில்​முனை​வோரை உரு​வாக்​கும் வகை​யில் 25 லட்ச ரூபாய் அளவுக்கு பிணை​யில்லா கடன் வழங்​கப்​படும். வேலை​வாய்ப்​பில் நம் இளைஞர்​களுக்கே முன்​னுரிமை. தனி​யார் நிறு​வனங்​களில் 75% தமிழர்​களை பணி​யமர்த்​தும் நிறு​வனங்​களுக்கு மாநில ஜி.எஸ்​.டி​யில் 2.5% மானி​யம் வழங்​கப்​படும். மின் கட்​ட​ணங்​களில் 5% மானி​யம் வழங்​கப்​படும்.

ஒவ்​வொரு கிராம ஊராட்​சி​யிலும் முதல்​வர் மக்​கள் சேவை நண்​பர் திட்​டம் தொடங்​கப்​படும். இதன்​மூலம் 5 லட்​சம் இளைஞர்​களுக்கு உள்​ளூரிலேயே வேலை​வாய்ப்பு வழங்​கப்​படும். தமிழ்​நாடு இளைஞர் ஆலோ​சனைக் குழு அமைக்​கப்​படும். இளைஞர்​கள் தங்​களின் கருத்​துகளை இதில் தெரிவிக்​கலாம். தமிழக பாரம்​பரி​யத்தை உலக அளவில் பரப்​ப நவீன படைப்​பாளி பள்​ளி​கள்​ அமைக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ பேசினார்.

SCROLL FOR NEXT