தமிழகம்

நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து கூட்டணி கட்சி தலைவர்கள் பெயரை நீக்கியது தவெக

செய்திப்பிரிவு

சென்னை: நட்​சத்​திர பேச்​சாளர்​கள் பட்​டியலில் இருந்து கூட்​டணி கட்​சித் தலை​வர்​களின் பெயர்​களை தவெக நீக்​கி​யுள்​ளது.

தமிழகத்​தில் காலி​யாக உள்ள மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய இரு சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கு அக்டோபர் 6-ல் இடைத்​தேர்​தல் நடக்கிறது. இதற்​கான வேட்​புமனுத் தாக்​கல் நிறைவடைந்​து, இறுதி வேட்​பாளர்​களும் இறுதி செய்​யப்​பட்​டு, அனல் பறக்​கும் பிரச்​சா​ரம் நடை​பெற்று வரு​கிறது.

இந்த தேர்​தலில் தவெக, திமுக, அதி​முக, நாம் தமிழர், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் என 5 முனைப் போட்டி நில​வு​கிறது. தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் உள்​ளிட்ட 40 நட்​சத்​திர பேச்​சாளர்​கள் பட்​டியலை தவெக வெளி​யிட்​டிருந்​தது. இதற்கு திமுக, அதி​முக, பாஜக ஆகிய கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​தன. பிற கட்​சிகளின் தலை​வர்​கள் எப்​படி தவெக நட்​சத்​திர பேச்​சாளர்​களாக மாறினர் என கேள்வி எழுப்பி இருந்​தனர்.

திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, பாஜக மாநில செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன் ஆகியோர், தவெக​வின் நட்​சத்​திர பேச்​சாளர் பட்​டியலை ரத்து செய்ய வேண்​டும் என தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் தெரி​வித்​திருந்​தனர். இந்​நிலை​யில், கூட்​டணி கட்​சித் தலை​வர்​களான காதர் மொய்​தீன், மாணிக்​கம் தாகூர், வைகோ, துரை வைகோ, திரு​மாவளவன், ரவிக்குமார், சிந்​தனைச் செல்​வன் ஆகியோர் பெயர்​களை நட்​சத்​திர பேச்​சாளர்​கள் பட்​டியலில்​ இருந்​து தவெக நீக்​கியுள்​ளது.

SCROLL FOR NEXT