தமிழகம்

தவெக ஆட்சி அமைப்பதற்காக பாஜகவின் ஆதரவை ஒருபோதும் நாடியதில்லை: நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

செய்திப்பிரிவு

கோவை: தவெக ஆட்சி அமைக்க பாஜக​வின் ஆதரவை நாடவில்லை என கோவை​யில் அமைச்​சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி​வித்​தார்.

வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கோவை விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் தெரிவித்ததாவது: முதல்​வர் விஜய் சொல்​லும் ஒவ்​வொரு வார்த்தைகளை​யும் முழு​மை​யாக கேட்​டு​விட்​டு, எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேச வேண்டும். சட்​டப்​பேர​வையை விட்டு வெளியே போய் கருத்து சொல்​லாமல், உள்ளே இருந்து கருத்து சொன்​னால் அதற்​கான பதில் எதிர்க்​கட்​சித் தலை​வருக்கு கிடைத்​திருக்​கும்.

திமுக கருத்​துகளை ஏற்​றுக்​ கொள்​ளாத காரணத்​தால்​தான், மக்கள் நிராகரித்​துள்​ளனர். முதல்​வர் விஜய் பிறந்​த​ நாளன்று பள்ளி மாணவர்​கள் கட்​சிக்​கொடி ஏந்​தி​யதற்கு நாங்​கள் பொறுப்பல்ல. சட்​டப்​பேர​வைக்​குள் 2 முறை தேசிய கீதம் இசைக்கப்​பட்​ட​தில் எந்த தவறும் இல்​லை.

தமிழக வெற்​றிக் கழகம் ஆட்​சி​யமைக்க பாஜக தலை​வர்​களை நாடிய​தாக நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். பாஜக ஆதரவை தவெக என்றைக்​கும் கேட்​க​வில்​லை. நயி​னார் நாகேந்திரன் காமெடி​யாக பேசிக்​கொண்​டிருக்​கிறார். நாங்​கள் தவறு செய்​ய​மாட்​டோம், தவறு செய்​ய​விட​மாட்​டோம் என முதல்வர் சொல்​லி​ உள்​ளார்.

எனவே, கோட​நாடு எஸ்​டேட்​டில் நடந்த கொலை, கொள்ளை உள்பட அனைத்து விவ​காரங்​களி​லும் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT