ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ கு.சரவணன்.

 
தமிழகம்

ஏரலில் இரவில் தூங்கிய மருத்துவரை எழுப்பி கேள்வி கேட்ட தவெக எம்எல்ஏ

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நள்ளிரவில் தூங்கிய மருத்துவரை எழுப்பி, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ கு.சரவணன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு அறையில் மருத்துவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த செவிலியர், தொலைபேசி மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

வெளியே வந்த மருத்துவரிடம், ‘இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக வரும்போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாவிட்டால், அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும்?” என எம்எல்ஏ சரவணன் கேள்வி எழுப்பினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதுகுறித்து, அரசு மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “நோயாளிகள் இல்லாத நேரத்தில் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அனுமதி உள்ளது. அரசின் நடைமுறையை அறியாமல் எம்எல்ஏ வீண்பழி சுமத்துகிறார்” என்றனர்.

SCROLL FOR NEXT