தமிழகம்

திமுக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்குமாறு ரூ.15 லட்சம் பேரம்: தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கோவை: ​தி​முக மீண்​டும் ஆட்​சியை பிடிக்​கும் என கூறச் சொல்லி ரூ.15 லட்​சம் பேரம் பேசியதாக கவுண்​டம்​பாளை​யம் தவெக எம்​எல்ஏ கனி​மொழி சந்​தோஷ் பேசி​னார்.

கவுண்​டம்​பாளை​யத்​தில் நேற்று முன்​தினம் நடந்த தவெக பொதுக் கூட்​டத்​தில் கனி​மொழி சந்​தோஷ் பேசி​ய​தாவது: கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் முதல் திமுக​வின் ‘கரூர் கம்​பெனி’ என்று நான் குறிப்​பிடும் தரப்​பிலிருந்து ரூ.15 லட்​சம் மதிப்​பிலான ஒரு பேக்​கேஜ் என்​னிடம் வந்​தது. 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக​தான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதி​யாக யூ டியூப் சேனலில் பேச வேண்​டும் என்று என்​னிடம் கூறப்​பட்​டது.

அப்​போது நான் தவெக​வில் இல்​லை. இருந்த போதிலும், ‘தி​முக மீண்டும் ஆட்​சிக்கு வராது’ என்று நான் தெளி​வாகக் கூறினேன். ஆனால், திமுக​தான் வெற்றி பெறும் என்று சொல்ல வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தப்​பட்​டது. அரசி​யலில் யார் வெற்றி பெறு​வார்​கள் என்​பதை பணம் கொடுத்து ஜோசி​யம் மூலம் உரு​வாக்க முடி​யாது. மக்​களின் தீர்ப்​பு​தான் இறுதி தீர்ப்​பு.

என்​னைப் பற்றி பல்​வேறு விமர்​சனங்​கள் வரு​கின்​றன. ‘அழ​கான பொம்​மை’ என்று சிலர் விமர்​சிக்​கிறார்​கள். ஆனால் இந்த அழகான பொம்​மை, தேவைப்​பட்​டால் ஆபத்​தான பொம்​மை​யாக​வும் மாறும். தவெக அடுத்​தடுத்த தேர்​தல்​களில் தனது வலிமையை நிரூபிக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT