தமிழகம்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல்

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யில் நடப்பு நிதி ஆண்​டுக்​கான பொது பட்​ஜெட் நாளை​யும், வேளாண் பட்​ஜெட் நாளை மறு​நாளும் தாக்​கல் செய்​யப்​படு​கின்​றன. முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால் மக்​களைக் கவரும், குறிப்​பாகப் பெண்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தரும் புதிய திட்​டங்​கள் குறித்த அறி​விப்​பு​கள் இடம்​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார். தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டு, பின்பு தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, நடப்பு 2026-27-ம் நிதி ஆண்​டுக்​கான பொது பட்​ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்​தில் தாக்​கல் செய்ய அரசு திட்​ட​மிட்​டது. அதற்​கேற்ப, பட்​ஜெட் முன்​த​யா​ரிப்​புப் பணி​கள் கடந்த 2 மாதங்​களாக நடை​பெற்​றன. பட்​ஜெட்​டில் இடம்​பெற வேண்​டிய புதிய திட்​டங்​கள், ஏற்​கெனவே செயல்​பாட்​டில் உள்ள திட்​டங்​களின் முன்​னேற்​றம், பல்​வேறு துறை​களின் செயல்​பாடு​கள், தேர்​தல் வாக்​குறு​தி​களில் உடனே நிறை​வேற்ற வாய்ப்பு உள்ள அறி​விப்​பு​கள் ஆகியவை குறித்து முதல்​வர் விஜய் தலை​மை​யில் ஜூலை 2 முதல் 31-ம் தேதி வரை துறை வாரி​யாக ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

இதற்​கிடையே, சட்​டப்​பேரவை மீண்​டும் ஆக.5-ம் தேதி கூடும் என்று பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் கடந்த ஜூலை 21-ம் தேதி அறி​வித்​தார். அதன்​படி, நடப்பு நிதி ஆண்​டுக்​கான பொது பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் மரிய வில்​சன் நாளை (ஆக.5) சட்​டப்​பேரவை​யில் தாக்​கல் செய்​கி​றார். வேளாண் பட்​ஜெட்டை துறை அமைச்​சர் வினோத் நாளை மறு​நாள் (ஆக.6) தாக்​கல் செய்ய உள்​ளார்.

தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால், பெண்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் அறி​விப்​பு​கள் இடம்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மகளிர் உரிமைத் தொகை, பால் கொள்​முதல் அதி​கரிப்​பு, இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்பு, நீட் தேர்வு போன்ற விவ​காரங்​களில் நாடாளு​மன்​றத்​தில் சட்​டத் திருத்​தம் கொண்​டுவர வலி​யுறுத்​துதல் போன்​றவை தொடர்​பான அறி​விப்​பு​கள் இடம்​பெறலாம் என்று கூறப்​படு​கிறது.

இதுத​விர, ‘வெற்​றித் தமி​ழ​கம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்​தாண்டு தொலைநோக்கு திட்​டத்​தில் மகளிர் சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.7,000 கோடி வட்​டி​யில்லா கடனுத​வி, கல்​வியை மாநிலப் பட்​டியலுக்​குக் கொண்​டுவர நடவடிக்​கை, மாண​வர்​கள் உயர் கல்விக்கு பிணை​யின்றி ரூ.20 லட்​சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்​நுட்​பப்​ பல்​கலைக்​கழ​கம்​ உள்​ளிட்​ட அம்​சங்​கள்​ இடம்​பெறக்​ கூடும்​ என்​றும்​ தகவல்​ வெளி​யாகியுள்​ளது.

SCROLL FOR NEXT