தமிழகம்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​கிறது. அப்​போது, தவெக அரசின் நடப்பு நிதி ஆண்​டுக்​கான முதல் பொது பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​படு​கிறது. நாளை வேளாண் பட்​ஜெட் தாக்​கலாகிறது.

தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று சில கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், புதிய முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார். புதி​தாக பொறுப்​பேற்ற தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்​கியது. அதன்​பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்​தப்​பட்டு, பின்பு சட்​டப்​பேரவை தேதி குறிப்​பி​டா​மல் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் நடப்பு நிதி ஆண்​டுக்​கான(2026-27) பொது பட்​ஜெட்​டைத் தாக்​கல் செய்​வதற்​காகச் சட்​டப்​பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடு​கிறது. அதன்​படி காலை 10 மணிக்கு கூடும் கூட்​டத்​தில், பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்​கி​றார். நாளை வேளாண் பட்​ஜெட்டை துறை அமைச்​சர் வினோத் தாக்​கல் செய்​கி​றார்.

அடுத்த சில நாட்​கள் இரண்டு பட்​ஜெட் மீதான விவாத​மும், அமைச்​சர்​களின் பதி​லுரை​யும் இடம்​பெறும். பேர​வைக் கூட்​டத்தை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது இன்று மதி​யம் நடை​பெறும் அலு​வல் ஆய்​வுக் கூட்​டத்​தில் முடி​வெடுக்​கப்​பட்டு அறிவிக்​கப்​படும்.

தவெக அரசின் முதல் பட்​ஜெட் என்​ப​தால் திட்​டங்​கள் பொது​மக்​களை கவரும் வகை​யில் இடம்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் மகளிர் உரிமைத் தொகை உயர்​வு, இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்​புத் திட்​டங்​கள் உட்பட பல்​வேறு அறி​விப்​பு​கள் இடம்​பெறலாம் என்று தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

பட்​ஜெட் மீதான விவாதம் முடிந்​தவுடன் தொடர்ந்து துறை​கள் வாரி​யாக மானியக் கோரிக்கை மீதான விவாத​மும் அமைச்​சர்​களின் பதி​லுரை​யும் இடம்​பெறும். இதற்​காக சுமார் ஓரு மாதம் வரை சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நடத்த வாய்ப்​பு​கள் உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT