வேலூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அருகில், துணை மேயர் சுனில்குமார், ஆணையர் சுல்தானா, பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர்.
வேலூர்: வேலூர் மாநகராட்சியில் ரிப்பேரான மின் மோட்டார்களை ரில்ஸ் வெளியிடுவதற்காக கழட்டி எடுத்துச் செல்லும் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சி அலுவ லகத்தில் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையர் சுல் தானா, கண்காணிப்பு பொறி யாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் பிரதாப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கவுன்சிலர் பாபிகதிரவன், ‘எனது வார்டில் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் இல்லை. ஓட்டேரியில் இருந்து சப்ளையாகும் ஆழ்துளை கிணற் றுக்கு மின் மோட்டார் இல்லை. மின்விளக்கு வசதியுமில்லை’ என்றார்.
பொறியாளர் கண்ணன், ‘ஓட்டேரியில் உள்ள 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிக்காக மின் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. குடிநீர் வீணாவதை தடுக்க வால்வு மாற்றப்படும். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் 110 வால்வுகள் மாற்றப்படவுள்ளன. மாநகராட் சியில் ரூ.3.75 கோடியில் 2,500 மின் விளக்கு கள் மாற்றப்பட உள்ளன’ என்றார்.
கவுன்சிலர் லோகநாதன், ‘வார்டுகளில் குப்பை சேகரிக் காமல் ஆங்காங்கே எரிக்கப் படுகிறது. இதற்கு என்ன காரணம் என விளக்க வேண்டும்’ என்றார். மாநகர நல அலுவலர், ‘மாநகராட்சியில் குப்பையை கொட்ட இடமில்லை.
குப்பையை எரிக்கும் இன்சுலேட்டர் கருவி பழுதானதால் சில மாதங் களாக குப்பையை எரிக்க முடியவில்லை. அதை சீர் செய்துள்ளதால் தினசரி 3 டன் வீதம் மீண்டும் எரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பிளாஸ் டிக் கழிவுகளை சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பும் பணியும் முடங்கியுள்ளது. மாதம் 30 டன் வீதம் அனுப்பிய நிலை மாறி கடந்த மாதம் 5 டன் மட்டுமே அனுப்பியுள்ளோம்’ என்றார்.
துணை மேயர் சுனில்குமார், ‘கடந்த ஜூன் மாதம் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி பேருந்து நிறுத்தங் களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றுவது குறித்து பேசப்பட்டது.
இந்த விளம்பர போர்டுகள் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் வருவதில்லை. நகரமைப்பு அதிகாரி தனியார் வீட்டுமனை பிரிவுகளுக்கு அனுமதி கொடுக்க ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கிறார். ஆனால், மாநகராட்சிக்கு வருவாய் உயர்த்த நடவடிக்கை எடுப் பதில்லை.
கவுன்சிலர் அன்பு, ‘எனது வார்டில் மின் மோட்டாரை தவெக நிர்வாகி ஒருவர் கழட்டி எடுத்துச் செல்கிறார். இதற்கு, மாநகராட்சி அதிகாரி எப்படி அனுமதி அளிக்கிறார். ஒரு கட்சி நிர்வாகி எடுத்துச் செல்ல ஏன் அனுமதி அளிக்கிறீர்கள்’ என்றார்.
பொறியாளர், ‘அப்படி செய்ய அனுமதிக்க முடியாது. உரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக் கப்படும்’ என்றார். கவுன்சிலர் சரவணன், ‘வேலூர் எம்எல்ஏ வேலூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் ஏதாவது வேலைகள் செய்து கொள் ளட்டும்.
அணைக்கட்டு தொகுதி யில் எதற்காக வந்து பணியை செய்து ரீல்ஸ் வெளியிடுகிறார். இதற்கு, அதிகாரிகள் துணை போவது எந்த விதத்தில் நியாயம்.
சுதாகர் கவுன்சிலர் ‘சொந்த செலவில் செய்த வேலைக்கு தவெகவினர் ரீல்ஸ் போடுகின்றனர். எனது வார்டில் ரிப்பேரான மோட்டாரை தவெக நிர்வாகி கழட்டி எடுத்துச் செல்கிறார். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சிஎஸ்ஆர் பெற்றுள்ளேன். நீங்கள் ஏன்? நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள்’ என்றார்.
பொறியாளர், ‘கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். கவுன்சிலர் கணேஷ், ‘மாநக ராட்சி சாலையோர தள்ளுவண்டி கடைகளின் உணவு கழிவு குப்பையை கால்வாய், சாலை யோரம் வீசி விட்டு செல் கின்றனர். அவர்களை ஏன்? முறைப்படுத்தவில்லை. பிளாஸ் டிக் கவர்களை ஏன்? பறிமுதல் செய்வதில்லை’ என்றார்.
நகர்நல அலுவலர், ‘நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பறிமுதல் நட வடிக்கைகள் தொடர்ந்து நடக் கிறது’ என்றார். கவுன்சிலர் அன்பு, ‘வண்டறந்தாங்கல் ஏரி முழுவதும் கழிவுநீர்தான் தேங்கியுள்ளது. அங்கு பன்றிகள் வளர்க்கப் படுகின்றன.
தனியார் கல்வி நிறுவனத்தில் இருந்து உணவு கழிவுகளை வாங்கி வந்து பன்றிகளுக்கு இரையாக கொடுக்கின்றனர். அந்த ஏரியில் இருந்து வரும் கழிவுநீர் குறித்து ஆய்வுக்கு வந்த ஆட்சியரிடம் சமாளித்துபதில் கூறிவிட்டோம். அந்த ஏரியில் வளர்க்கப்படும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என்றார். ஆணையர், ‘நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.