தமிழகம்

திமுகவுக்கு தடை இல்லை; எங்களுக்கு அனுமதியே இல்லை - தவெக நிர்வாகிகள் புகார்

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: திமுக​வுக்கு தடை இல்​லை. எங்​களுக்கு மட்​டும் அனு​மதி அளிப்​ப​தில்லை என தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் தவெக நிர்​வாகி​கள் புகார் அளித்​துள்​ளனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக வழக்​கறிஞர் பிரிவை சேர்ந்​தவர்​கள் தங்​களுக்கு திட்​ட​மிட்டு பிரச்​சார அனு​மதி மறுக்​கப்​படு​வ​தாக திரு​வள்​ளூர் தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் புகார் அளித்​துள்​ளனர்.

          

இதுகுறித்து தவெக வழக்​கறிஞர் பிரிவை சேர்ந்த பிரி​யங்கா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​வள்​ளூர், பூந்​தமல்லி தொகுதி வேட்​பாளர்​களுக்​கான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த அனு​மதி கோரி 2 நாட்​களுக்கு முன் அனு​மதி கோரினோம்.

ஆனால் போலீஸ் தரப்​பில் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. மேலும் சுவிதா செயலி​யிலும் விண்​ணப்​பித்​தோம். ஆனால் பதில் ஏதும் இல்​லை.

50 நபர் மட்​டுமே கூடு​வார்​கள் என்று கூறி அனு​மதி கோரி​னாலும் போக்​கு​வரத்து நெரிசல் பாது​காப்பு காரணங்​களை கூறி அனு​மதி மறுக்​கின்​றனர்.

திமுக வேட்​பாளர் கடந்த 2 நாட்​களாக கட்சி கூட்​டங்​களை நடத்தி வரு​கிறார். ஆனால் அதை யாரும் கண்டு கொள்​ள​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT