சென்னை: கட்டாய தமிழ் பாடத்தில் 85 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளது தமிழுக்கு திமுக செய்த துரோகத்தின் வெளிப்பாடு என தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கட்டாய தமிழ் பாடத்தில் 85 ஆயிரம் பேர் தோல்வியடைந்திருக் கிறார்கள்.
இது தமிழை காப்பாற்றுகிறேன் என வெற்று வசனம் பேசும் ஆட்சியின் தோல்வி. நடைமுறையில் தமிழ் எந்த அளவுக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கும் இந்த தேர்வு முடிவுகள் சாட்சி.
தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுக தனது முந்தைய ஆட்சிக் காலங்களிலும் இப்போதும் தமிழுக்கு செய்த துரோகத்தின் வெளிப்பாடு தான் இது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.