தமிழகம்

234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் தவெக? - நான்கு முனை போட்டிக்கு தயாராகும் தமிழகம்

செய்திப்பிரிவு

விஜய்​யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகு​தி​களி​லும் தனித்து களம் காணப்​போவ​தாக வெளி​யாகி​யுள்ள தகவல், தமிழக அரசி​யலில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதன் மூலம், திரா​விடக் கட்​சி​களின் பலப்​பரிட்​சைக்கு மத்​தி​யில் ‘நான்கு முனைப் போட்​டி’ உறு​தி​யாகி​யுள்​ளது.

தமி​ழ​கத்​தில் விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளது. ஆளுங்​கட்​சி​யான திமுக தலை​மை​யில் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, மதி​முக மற்​றும் புதி​தாக இணைந்​துள்ள தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகள் இருக்​கின்​றன. கடந்த கால கசப்​பு​களை மறந்து மீண்​டும் இணைந்​துள்ள அதி​முக, பாஜக மற்​றும் பாமக உள்​ளிட்ட கட்​சிகள் கைகோர்த்​திருக்​கின்​றன. வழக்​கம் போல் தேர்​தலில் தனித்து நிற்​பது என்ற ஒற்றை இலக்​குடன் சீமான் களம் காண்​கி​றார். இந்த சூழலில் தவெக​வின் ‘தனித்து போட்​டி’ என்ற முடிவு, தமிழக அரசி​யலில் நான்​கு​முனை போட்​டியை உரு​வாக்​கி​யுள்​ளது.

          

இதற்​கிடை​யில் கடந்த சில நாட்​களாக பாஜக மேலிடம், குறிப்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​குள் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுத்​த​தாகத் தகவல்​கள் வெளி​யாகின. தமி​ழ​கத்​தில் திமுக-வை வீழ்த்த விஜய்​யின் வாக்கு வங்கி அவசி​யம் என பாஜக கரு​தி​யது. இதற்​காக ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்​யாண் மூல​மாக​வும் பேச்​சு​வார்த்​தைகள் நடத்​தப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

கூட்​ட​ணிக்​குத் தூது வந்​தவர்​களிடம் விஜய் தரப்​பில் வைக்​கப்​பட்ட நிபந்​தனை​கள் அரசி​யல் வட்​டாரத்தை அதிர வைத்​தன. “90 தொகு​தி​கள் ஒதுக்​கப்பட வேண்​டும்; இரண்​டரை ஆண்​டு​கள் முதல்​வர் பதவி வழங்​கப்பட வேண்​டும்” என்ற நிபந்​தனை​களை விஜய் தரப்பு முன்​வைத்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதனை அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி ஏற்க மறுத்​த​தால், கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்தை முட்​டுக்​கட்​டை​யில் முடிந்​த​தாகத் தெரி​கிறது.

இதை மைய​மாக வைத்து கட்​சிக்​குள் பொதுச் செய​லா​ளர்​களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு இடையே அதி​காரப் போட்டி நிலவி வந்​த​தாகச் செய்​தி​கள் கசிந்​தன. சமீபத்​தில் கட்சி நிர்​வாகி​களு​டன் நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், “என்ன நடந்​தா​லும் வரும் தேர்​தலில் நாம் தனித்து தான் போட்​டி​யிடு​கி​றோம்” எனத் தெள்​ளத்​தெளி​வாகக் கூறிய விஜய், மோதலில் இருந்த நிர்​வாகி​களைச் சமா​தானப்​படுத்தி தேர்​தல் பணி​களை வேகப்​படுத்த உத்​தர​விட்​டுள்​ளார். இருப்​பினும் தொடர்ச்​சி​யாக பாஜக தரப்​பில் கூட்​ட​ணிக்​கான முயற்சி நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதனால் பரபரப்​பான சூழல் ஏற்​பட்​டிருக்​கிறது.

SCROLL FOR NEXT