கோப்புப் படம்

 
தமிழகம்

தாராபுரத்தில் வாக்கு சேகரிப்பின்போது மீண்டும் வாக்குவாதம்: பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்த தவெக வேட்பாளர்

செய்திப்பிரிவு

தாராபுரம்: ​தா​ராபுரம் தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் சத்​ய​பாமா வாக்​குசேகரித்​த​போது, பொது​மக்​களில் சிலர் அவருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தால் பிரச்​சா​ரத்தை பாதி​யில் ரத்து செய்தார்.

தாராபுரத்தில் தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மா, குண்​டடம் ஒன்​றி​யம், பெரிய குமார​பாளை​யம் மற்​றும் சுற்று வட்​டார பகு​தி​களில் நேற்று வாக்கு சேகரித்​தார். பெரிய குமார​பாளை​யம் பகு​திக்குச் சென்​ற​போது, அங்கு திரண்​டிருந்த பொது​மக்​களில் சிலர் அவரது பிரச்​சா​ரத்​துக்கு எதிர்ப்​புத் தெரி​வித்​தனர். “ரூ.50 கோடி பெற்​றுக்​கொண்டு கட்சி மாறி​விட்​டீர்கள்; மக்​களின் நம்​பிக்​கைக்​குத் துரோகம் இழைத்​து​விட்டு இப்​போது எப்​படி ஓட்டு கேட்க வரலாம்?” என்று ஆவேச​மாகக் கேள்வி எழுப்​பினர்.

இதையடுத்து சத்​ய​பா​மாவுக்கும், அப்​பகுதி பொது​மக்​களுக்​கும் இடையே கடுமை​யான வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. தொடர்ந்து எதிர்ப்​பு கோஷங்களை எழுப்​பியதால், அவர் பிரச்​சா​ரத்தை பாதியிலேயே ரத்து செய்​து விட்டு கிளம்பினார். ஏற்​கெனவே வேட்​புமனு தாக்​கலின்போது அதி​முக​வினர் அவரை எதிர்த்து கோஷமிட்​டனர். இரு தினங்​களுக்கு முன் பிஏபி விவ​சா​யிகள் சத்​ய​பா​மாவுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT