அருண்ராஜ்
அதிமுக, பாஜக, விஜய் ஓரணியில் இருப்பது சாத்தியம் என்று தமிழருவி மணியன் கூறியது அவரது கருத்து. அவரது அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை என தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். ஒரு நடிகருக்காக நான் அரசு வேலையை விட்டு வரவில்லை. விஜய் தற்போது நடிகர் கிடையாது. அவர் நடிப்பை விட்டுவிட்டு, மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்து விட்டார்.
ஆனால், அரசியலில் சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. அதேசமயம் நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் கூடுதல் சக்தி வாய்ந்தவர். அதிமுக, பாஜக, விஜய் ஓரணியில் இருப்பது சாத்தியம் என்று தமிழருவி மணியன் கூறியது அவரது கருத்து. அவரது அறிவுரை எங்களுக்கு தேவையில்லை. யாருக்கு அறிவுரை தேவையோ அவருக்கு கொடுத்தால் போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.