நாமக்கல்: “திமுக ஒரு மூழ்கும் கப்பல். அதில் கூடுதல் சுமையாக ஓ.பன்னீர்செல்வம் இணைந்துள்ளார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, “திமுக ஒரு மூழ்கும் கப்பல். அதில் கூடுதல் சுமையாக ஓ.பன்னீர்செல்வம் இணைவதால் வேகமாக கப்பல் மூழ்குமே தவிர மீண்டு வராது. தவெக நிர்வாகிகளிடையே வேட்பாளர் தேர்வில் எந்த குழப்பமும் இல்லை. இது தொடர்பாக யாரோ சிலர் வதந்தி பரப்புகின்றனர். சசிகலா கூட்டணிக்கு வருவது குறித்து விஜய்தான் முடிவெடுப்பார். காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.