தமிழகம்

தமிழ் தேசிய களத்தில் இனி தவெக, விசிக இணைந்தே பயணிக்கும்: உளுந்தூர்பேட்டை மாநாட்டில் திருமாவளவன் உறுதி

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும் விசிக​வும் இணைந்தே இனி பயணிக்​கும் என விசிக தலை​வர் திருமாவளவன் அறி​வித்​துள்​ளார்.

விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவனின் பிறந்​த​நாளான நேற்​று, அக்​கட்​சி​யின் சார்​பில் கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்​டை​யில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடை​பெற்​றது. அமைச்​சர் வன்னி அரசு வரவேற்​றார்.

மாநாட்​டுக்கு தலைமை வகித்த திரு​மாவளவன் தனது பேச்​சின் தொடக்​கத்​தில், தனக்கு பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், நடிகர் ரஜினி​காந்த், தமிழீழ விடு​தலைப் புலிகள் அமைப்​பைச் சேர்ந்த ஈழவேந்​தன், நடிகர்​கள் சத்​ய​ராஜ், ராம​ராஜன் ஆகியோ​ருக்கு நன்றி தெரி​வித்​தார். பின்​னர் மாநாட்டு தீர்​மானங்​களில் சில​வற்றை வாசித்​தார்.

“சாதி ஒழிப்​பு, மதச்​சார்​பின்​மை, சுதந்​திரம், சமத்​து​வம், சகோ​தரத்​து​வம் ஆகிய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை கொள்​கைகளையே தமிழ் தேசி​யத்​தின் அடித்​தள​மாகக் கொண்டு செயல்பட வேண்​டும். சாதி​யை​யும், சாதி​யத்தை பாது​காக்​கும் மதவாதத்​தை​யும் எதிர்த்​து, அனை​வருக்​கும், சம உரிமை, சமூக நீதியை உறுதி செய்​யும் தமிழ் தேசிய அரசி​யலை முன்​னெடுக்க இந்த மாநாடு உறு​தி​யேற்​கிறது.

தமிழர்​களின் மொழி உரிமை, இன உரிமை பண்​பாட்டு உரிமை மற்​றும் அரசி​யல் உரிமை​களை பாது​காக்​கும் வகை​யில் தமிழ்​நாட்​டுக்கு உண்​மை​யான மாநில சுயாட்​சியை உறுதி செய்ய வேண்​டும். கல்வி பொருளா​தா​ரம் நிர்​வாகம், கலை இலக்​கி​யம் பண்​பாட்டு உள்​ளிட்ட அனைத்து துறை​களி​லும் மாநிலங்​களின் அதி​காரத்தை விரிவுப்​படுத்​தும் அரசமைப்​புச் சட்​டத்​தில் திருத்​தங்​களை மேற்​கொள்ள மத்​திய அரசை இம்​மா​நாடு வலி​யுறுத்துகிறது.

விசிக தமிழ்​நாட்​டின் தவிர்க்க முடி​யாத சக்தி என்​பதை மாநாடு மீண்​டும் உறு​திப்படுத்​தி​யிருக்​கிறது. நாம் இப்​போது அங்​கீ​காரம் பெற்ற கட்​சி​யாக இருக்​கிறோம், இனி வருங்​காலத்​தில் ஆளும் கட்​சி​யாக வளர வேண்​டும். இத்​தனை காலம் ஆளும் கட்​சி​யோடு கூட்டணி வைத்​தோம்.

125 தீர்​மானங்​கள்...

இது​வரை​யில் காங்​கிரஸ், திமுக, அதி​முகவே ஆளும்​ கட்​சி​யாக இருந்​துள்​ளன. தற்​போது ஆளும் தவெக​வுடன் கூட்​டணி வைத்​திருக்​கிறோம். இனி தமிழ் தேசிய களத்​தில் தவெக​வும், விசிக​வும் இணைந்தே பயணிக்​கும். விடு​தலைச் சிறுத்​தைகளும் ஆளும்​கட்​சி​யாக பரிணமிக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

தமிழ் தேசி​யம் சார்ந்து இந்த மாநாட்​டில் 125 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அடங்க மறுத்த தொண்டர்களால் மாநாடு பாதியில் முடிந்தது

விசிக மாநாட்டுக்காக காலை 11 மணி முதலே தொண்டர்கள் உளுந்தூர்பேட்டையில் குவியத் தொடங்கினர். மாலை 4 மணிக்கு மாநாட்டு மேடைக்கு திருமாவளவன் வந்த போது மேடையில் இருந்து தொண்டர்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ‘ரேம்ப்’ பகுதியை தொண்டர்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்தனர்.

அவர்களை கட்டுப்படுத்த நேரடியாக திருமாவளவனே கீழே இறங்கினார். தொண்டர்கள் அவரது கையையும், காலையும் பிடித்துக் கொண்டு விட மறுத்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த திருமாவளவன் அவர்களை அதட்டியும் பிடித்து தள்ளியும் அங்கிருந்து அகற்ற முயன்றார்.

கடும் நெருக்கடி ஏற்பட்டதால் பதற்றமானவர், மாநாட்டு உரையை தவிர்த்து, மாநாட்டுத் தீர்மானங்களை மட்டுமே வாசித்தார்.அப்போது கூட்ட நெரிசலில் சிலர் மயங்கி விழ, அவர்களை பவுன்சர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் மாலை 5.30 மணிக்கெல்லாம் மாநாட்டு மேடையில் இருந்து திருமாவளவன் கீழே இறங்கிச் சென்றார். அத்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகளும் முடிவுற்றன.

SCROLL FOR NEXT