தமிழகம்

அன்புமணியையும் திருமாவையும் வீழ்த்த விஜய்யுடன் கைகோக்கும் ராமதாஸ்

செய்திப்பிரிவு

பாமக-​வில் தந்​தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்​சினை​யால் கட்​சி​யினர் இரு பிரி​வு​களாக செயல்​பட்டு வரு​கின்​ற​னர். கட்​சி​யில் பெரும்​பாலான​வர்​கள் அன்​புமணி பக்கம் இருப்பதால் கட்​சிக்​குள் அன்​புமணி கை ஓங்கி இருக்​கிறது. இதைச் சாதக​மாக பயன்​படுத்தி முன்​கூட்​டியே அதி​முக கூட்​ட​ணி​யில் அன்​புமணி இடம்​பிடித்​தார்.

இதனால், அந்​தக் கூட்​ட​ணி​யில் ராம​தாஸால் இணைய முடி​யாமல் போனது. இதையடுத்​து, அடுத்த வாய்ப்​பாக திமுக கூட்​ட​ணி​யில் இணைய ராம​தாஸ் தீவிர முயற்சி மேற்​கொண்​டார். ஆனால் அங்​கே. திரு​மாவளவன் முட்​டுக்​கட்​டை​யாக இருப்​ப​தால் அந்த வாய்ப்​பும் ராம​தாஸுக்கு கைநழு​விப் போனது.

          

இந்த நிலை​யில் கூட்​டணி தொடர்​பாக கட்சி நிர்​வாகி​கள், நண்​பர்​கள், குடும்ப உறுப்​பினர்​களிடம் ராம​தாஸ் கடந்த சில தினங்​களாக தீவிர ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, தவெக தலை​வர் விஜய்க்கு இளைஞர்​களின் ஆதரவு அதி​க​மாக உள்​ளது. குறிப்​பாக, விஜய்க்கு பெண்​கள் மத்​தி​யில் பெரும் வரவேற்பு இருக்​கிறது. அதனால், விஜய்​யுடன் கூட்​டணி அமைக்​கலாம். அதன் மூலம், ஒரே கல்​லில் அன்​புமணி​யை​யும், திமுக கூட்​ட​ணிக்கு முட்​டுக்​கட்​டை​யாக இருக்​கும் திரு​மாவளவனை​யும் வீழ்த்த முடி​யும் என ஆதர​வாளர்​கள் ராம​தாஸிடம் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, விஜய்​யுடன் கூட்​டணி அமைப்​பது தொடர்​பாக ராம​தாஸ் அடுத்த கட்ட ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​கி​றார். ஒரு தேசிய கட்சி உள்​ளிட்ட சில கட்​சிகளு​டன் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்தி வரும் தவெக தரப்​பு, ராம​தாஸ் தரப்​புட​னும் கூட்​ட​ணி, இடங்​கள், ஆட்​சி​யில் பங்கு போன்​றவை குறித்து பேசி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

இதுதொடர்​பாக ராம​தாஸ் தரப்பு பாமக நிர்​வாகி​களிடம் கேட்ட போது, “பாமக, வன்​னியர் சமூகம் என்​றாலே அது ராம​தாஸ் என்று அனை​வ​ருக்​கும் தெரி​யும். குறிப்​பாக, வன்னியர் சமூகத்தினர் ராம​தாஸ் மீது பெரும் மதிப்​பும், மரி​யாதை​யும் வைத்​துள்​ளனர். வடமாவட்​டங்​களில் கணிச​மான வாக்கு வங்​கியை பாமக வைத்​துள்​ளது. வடமாவட்​டங்​களில் விஜய்க்​கும் அதிக அளவில் ரசிகர்​கள் உள்​ளனர்.

மேலும், விஜய்க்கு இளைஞர்​கள், பெண்​களிடம் அதிக அளவில் ஆதரவு உள்​ளது. ராம​தாஸின் அரசி​யல் அனுபவ​மும், விஜய்​யின் நட்​சத்​திர அந்​தஸ்​தும் ஒன்​றாக சேரும்​போது, மக்​களின் ஆதர​வும், தேர்​தலில் வெற்​றி​வாய்ப்​பும் பன்​மடங்கு அதி​கரிக்​கும். இதையெல்​லாம் மனதில் வைத்தே தவெக கூட்​டணி குறித்து ராம​தாஸ் பரிசீலனை செய்து வரு​கி​றார்” என்​றனர்​.

SCROLL FOR NEXT