மாணிக்கம் தாகூர்

 
தமிழகம்

“தவெக கூட்டணியின் பெயர் செப்.9-ல் அறிவிப்பு” - மாணிக்கம் தாகூர் தகவல்

தமிழினி

சென்னை: “பனையூரில் செப்.9-இல் நடைபெறும் தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்போம்; இந்தக் கூட்டத்தில் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது.” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர். அந்த சர்ச்சை முடிந்துபோன கதை என்றும் அவர் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை இன்று சந்தித்த மாணிக்கம் தாகூர், “பிரதமர் வேட்பாளர் விவகாரம் முடிந்து போன கதை. ஒரு சில பத்திரிகையாளர்கள் தான் முடிந்துபோன கதையை திரும்பத் திரும்பப் பேசிவருகின்றனர். சில பத்திரிகை குழுமங்கள் மதச்சார்பற்ற கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த பல விதத்தில் பாடுபடுகின்றன. அது தோல்வியுறும். தேசிய, மாநில அளவில் மதச்சார்பற்ற, சமூகநீதியை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், இதை நாங்கள் தெளிவாக எடுத்துச் செல்வோம். இந்திய அளவில் ராகுல் காந்தி இதற்கான பொறுப்பை எடுத்துச் செல்வார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பனையூரில் செப்.9-ல் நடைபெறும் தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்போம்; இந்தக் கூட்டத்தில் தவெக கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டணி நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும். பலமாக இருக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளிலும் ஒருமித்த கருத்து எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.

ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்யும், அமைச்சர்களும் தெளிவாக இருக்கின்றனர்” இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT